முந்தய பக்கம்

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா

2 hours before
தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா
<p><strong>தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா</strong></p><p>தருமபுரி, அக்.4-விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது.விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில்,அவரது உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாலை அணிவித்து மலர் தூவி மரி</p><p>யாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பாரத மாதா நினைவாலயத்தை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா தாள்கள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram