முந்தய பக்கம்

சார்பு ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

20 Jun 2026, 11:17 pm
சார்பு ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
<p><strong>சார்பு ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை</strong> </p><p>அருப்புக்கோட்டை, ஜூன் 20- அருப்புக்கோட்டையில் காவல்துறையில் பணியாற்றி வரும் சிறப்பு சார்பு ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை கைலாச ஊரணியைச் சேர்ந்த ஜெயகோபி (54), விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவ ரது மனைவி கவிதா (48). இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram