சு.வெங்கடேசன் எம்.பி. நிதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடைகள் திறப்பு
8 Mar 2026, 3:42 pm
<p><strong>சு.வெங்கடேசன் எம்.பி. நிதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடைகள் திறப்பு</strong></p>
<p>மதுரை, மார்ச் 8- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட பல்வேறு பணிகள் சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சி வார்டு 56-க்கு உட்பட்ட முரட்டம்பத்திரி, பொன்னகரம் பிராட்வே பகுதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை எம்.பி சு.வெங்க டேசன் திறந்து வைத்தார். தொடர்ந்து வார்டு 76-க்கு உட்பட்ட மேலவாசல் பகுதி யில் அமைக்கப்பட்ட 2 உயர்மின் கோபுர விளக்குகளையும் திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா. பாலசுப்பிர மணியம், வை.ஸ்டாலின், அ.கோவிந்த ராஜன், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னி யம்மாள், பகுதிச் செயலாளர்கள் மத்தி–1 ஏ. பாண்டி, மத்தி–2 பி. கோபிநாத், மாவட்ட குழு உறுப்பினர் பி.ஜீவா, திமுக நிர்வாகி திராவிட மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
