தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓபிசி அநீதியைக் களைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றிய அரசு உடனே அமலாக்க சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!

16 Mar 2026, 4:46 pm
ஓபிசி அநீதியைக் களைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  ஒன்றிய அரசு உடனே அமலாக்க சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
<p><strong>ஓபிசி அநீதியைக் களைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு &nbsp;ஒன்றிய அரசு உடனே அமலாக்க சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!</strong></p> <p>மதுரை, மார்ச் 16 - &nbsp;ஓபிசி (OBC) பிரிவின ருக்கான &lsquo;கிரீமி லேயர்&rsquo; வருமான அள வீட்டில் கடந்த 20 ஆண்டு களாக இழைக்கப்பட்டு வந்த அநீதியை &nbsp;உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின் மூலம் களைந் துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்பு &nbsp;தெரிவித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு விதி ரத்து இது தொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கையில், &ldquo;பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமை யைச் சிதைக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 11 தேதியிட்ட தீர்ப்பு சாட்டையடி யாக அமைந்துள்ளது. குறிப்பாக, 2004-ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் &nbsp;பயிற்சித்துறை (DoPT) கொண்டு வந்த &nbsp;விதியின் 9-ஆவது பத்தியைச் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து உள்ளது&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: * சம்பளம் மற்றும் விவசாய வருமா னம் சேர்ப்பதற்குத் தடை: கிரீமி லேயர் கணக்கிடும்போது சம்பளம் மற்றும் &nbsp;விவசாய வருமானத்தைச் சேர்க்கக் &nbsp;கூடாது என்ற 1993-இன் மூல அரசா ணையை நீதிமன்றம் உறுதிப்படுத்தி யுள்ளது. சொத்து, வணிகம் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வரும் வரு மானம் மட்டுமே கணக்கில் கொள்ளப் படும். * பாகுபாடு ஒழிப்பு: அரசு ஊழியர் களுக்குப் பதவி அடிப்படையிலும், பொதுத்துறை/தனியார் ஊழியர்களுக் குச் சம்பள அடிப்படையிலும் வருமா னத்தைக் கணக்கிடுவது சமத்துவத் திற்கு எதிரானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. * சமூக அந்தஸ்தே அளவுகோல்: கிரீமி லேயரை வெறும் பொருளாதா ரத்தை (சம்பளம்) வைத்து மட்டும் முடிவு &nbsp;செய்யக்கூடாது; பெற்றோரின் சமூக &nbsp;அந்தஸ்து மற்றும் வகிக்கும் பதவியைக் &nbsp;கொண்டே தீர்மானிக்க வேண்டும் எனத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. * பணி உயர்வு மற்றும் இடமாற்றம்: &nbsp;தவறான விளக்கத்தால் இடஒதுக்கீட்டை இழந்த ஓபிசி அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் அகில இந்தியப் &nbsp;பணிகளில் கேடர் (cadre) மாற்றமும் இத்தீர்ப்பின் மூலம் கிடைக்கும். முன்தேதியிட்டு அமலாக்க உத்தரவு இந்தத் தீர்ப்பை ஆறு மாதங்க ளுக்கு முன் தேதியிட்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என DoPT-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வருங்கால சிவில் சர்வீசஸ் &nbsp;தேர்வுகளில் வட்டாட்சியர் வழங்கும் &nbsp;ஓபிசி சான்றிதழ்களுக்கே முன்னுரிமை &nbsp;அளிக்கப்பட வேண்டும் என்றும், சம்ப ளத்தைக் காட்டி அதனை நிராகரிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை நீர்த்துப் போகச் செய்யாமல், ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தனது அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.