அண்ணாவுக்கு ‘பாரத ரத்னா’ சு.துரைசாமி வலியுறுத்தல்
3 Feb 2026, 4:00 pm
<p><strong>அண்ணாவுக்கு ‘பாரத ரத்னா’ சு.துரைசாமி வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், பிப்.3- பேரறிஞர் அண்ணா வுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண் டும். சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்க வேண் டும் என்று திராவிட இயக்க மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.துரைசாமி கூறினார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன் னிட்டு, திராவிட இயக்க மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சு.துரைசாமி புதனன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்ணா வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அங்கு வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, இவ்வீட்டைப் பராமரிக்க முதல் வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எளிமையான வாழ்வு வாழ்ந்த அண்ணாவுக்கு ஒன்றிய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தர வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணா அன்று விதைத்த மொழிப்பற்று இன்று பிற மாநிலங்களி லும் பரவி வருகிறது. அனைத்து மாநில மொழிகளை யும் ஒருங்கிணைக்கும் தலைமை தற்போது தேவைப் படுகிறது. இன்றைய அரசியலில் சாதி உணர்வு மேலோங்கி யுள்ளது வருத்தமளிக்கிறது. கொள்கை, தியாகம், சுய மரியாதை இல்லாத அரசியலால் மாற்றத்தை ஏற்ப டுத்த முடியாது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், போதிய அரசியல் பக்கு வமும் தெளிவான சட்டதிட்டங்களும் இல்லாமல் கூட் டத்தை மட்டும் வைத்து வெற்றி பெற முடியாது எள் றார்.</p>
