ஒப்பந்த தொழிலாளர் முறை வெறும் தொழிற்தகராறு அல்ல, மனித உரிமைப் பிரச்சனை - சு. வெங்கடேசன்
30 Sept 2026, 9:58 pm

ஒப்பந்த தொழிலாளர் முறை வெறும் தொழிற்தகராறு அல்ல, மனித உரிமைப் பிரச்சனை - சு. வெங்கடேசன்

இன்றைய தினம் நாம் மிகுந்த அக்கறைதில்லியைச் சுற்றி எழுந்த போராட்ட அலை

யோடும் உரத்த குரலிலும் பேச வேண்டிய மிக முக்கியமான பகுதி கிருஷ்ணகிரிமாவட்டம். தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் இம்மாவட்டத்தில் 54 பெரும் தொழிற்சாலைகளும், சிறு–குறு–நடுத்தரத் தொழில்(MSME) பிரிவில் சுமார் 19,000 நிறுவனங்களும் (5,000க்கும் மேற்பட்டவைஉற்பத்தித் துறையில், 14,000க்கும் மேற்பட்டவை சேவைத் துறையில்) உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம்என மூன்று மாநிலங்களின் சங்கமமாகவும், சூழலியல் ரீதியாகமுக்கியமான பகுதியாகவும் இருக்கும் கிருஷ்ணகிரி, சென்னையைச் சுற்றிய பகுதிகளின் தொழில் வளர்ச்சி தேங்கிநிற்கும் இக்காலத்தில், தமிழ்நாட்டின் அடுத்தகட்டத் தொழில் வளர்ச்சிக்கான புதிய மையமாக உருவெடுத்திருக்கிறது. இத்தொழில் வளர்ச்சியை முற்போக்காளர் களாகிய நாமும்மனமார வரவேற்கிறோம், ஊக்குவிக்கிறோம். ஏனெனில் இதுபோன்ற வளர்ச்சிதான் இங்கு நிலவும் பிற்போக்குத்தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்து, சமூகத்தை ஒரு புதிய நவீன வாழ்க்கை நோக்கி நகர்த்த முடியும்.

சிவப்பு மண்டலமாக ஒரு மாவட்டம்

ஆனால் இந்த 19,000 தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கை குறித்து அரசு புள்ளிவிவரம் சுமார் 1.38லட்சம் எனச் சொல்ல, தோழர்கள் தரும் கணக்கு 2 லட்சம். இதில் நிரந்தரத் தொழிலாளர்கள் வெறும் 10–15% மட்டுமே; மீதமுள்ள சுமார் 1.75லட்சம் பேர் ஒப்பந்த அல்லது அன்றாடக் கூலித் தொழிலாளர்கள். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்திருக்கும் இந்த மாவட்டம், வெறும் தொழில் பிரச்சினையோ தொழிலாளர் பிரச்சினையோ மட்டுமல்ல — இது ஒரு ‘சிவப்பு மண்டலம்’;ஏனெனில் இவர்களின் அடிப்படை உரிமைகள் — சட்டப்படியான வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்குச் சம வாய்ப்பு, பெண்களுக்கான சிறப்புரிமைச் சட்டங்கள் — எப்படி மீறப்பட்டு நசுக்கப்பட்டுபறிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியபொறுப்பை அரசுக்கு செய்கிறதோ இல்லையோ, அதை உறுதிப்படுத்த வேண்டிய மகத்தான பொறுப்புசிஐடியுவுக்கு இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு வருமுன், இங்குள்ள தொழிலாளர்கள் நாள்தோறும் 10–12 மணி நேரம் பசியுடனும் சிரமத்துடனும் பணியாற்றும் நிலை குறித்து, அவர்களின் உரிமைகளைக் காக்க வேண்டுமெனக் கோரி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

தில்லியைச் சுற்றி எழுந்த போராட்ட அலை

கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று, தில்லியைச் சுற்றியுள்ளதொழில் நகரங்களில் நடந்த ஒப்பந்த தொழிலாளர் போராட்டம். பிப்ரவரி 11 அன்று, ஓர் இளைஞர் தன் சிறுகோரிக்கைக்காக பணித்தளத்தில் உயர் அதிகாரியிடம் அறை வாங்கியதே தீப்பொறியானது; பிப்ரவரி முதல் மே வரை ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் என பல லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டு, இந்திய வரலாற்றிலேயே ஒப்பந்த தொழிலா ளர்களின் மகத்தான போராட்டமாக இது வளர்ந்தது.

50 ஆண்டுகளில் மோசமடைந்த அடிமைத்தனம்

வரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் 1850இல் அடிமை முறை தடை செய்யப்பட்டபோது, அதே முதலாளிகள் புதிய வடிவில் — காலனி நாடுகளிலிருந்து மக்களைக் கொஞ்ச ஊதியத்திற்கு அழைத்துச் சென்று நிரந்தரமாக வைத்திருக்கும் ‘ஒப்பந்த அடிமை’ முறைக்கு மாற்றினர்; பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா என பல இடங்களுக்குத் தமிழர்கள் உட்பட இப்படியே அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாவது உதாரணம் இன்றைய உலகின் கொடூரத்தைகாட்டுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் படையெடுத்தபோது, பிரிட்டிஷார் பர்மாவை விட்டு வெளியேறும்முன், சிறைச்சாலைகள், மனநல மருத்துவமனைகள் என அனைத்தையும் திறந்துவிட்டு எல்லோரையும் தப்பிக்கச் சொன்னார்கள். ஆனால் நான்கு மாதங்களுக்கு முன் இராக்–குவைத் பகுதியில் அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தபோது, அமெரிக்கரும் ஐரோப்பியரும் தத்தம் நாடுகளால் திரும்ப அழைக்கப்பட்டனர்; அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களால் திரும்ப முடியவில்லை — ஏனெனில் அவர்களின் பாஸ்போர்ட்டையே முதலாளி வைத்திருக்கிறான், அவன் அனுமதியின்றி நாடு திரும்பவே முடியாது. 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதிகாரம் கூட ஒரு வித மனிதாபிமானத்தைக் கொண்டிருந்தது; இன்று ‘செத்தாலும் இங்கேயே செத்துப்போ, வெளியே போகாதே’ என்பதே உலக முதலாளித்துவத்தின் அடிப்படை. ஐம்பது ஆண்டுகளில் உலகின் முதலாளித்துவமும் அதன் அதிகாரமும் எவ்வளவு கொடூரமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதற்குக் கண்முன்னே இருக்கும் உதாரணம் இது. கோவிட் காலத்திலும் இதையே கண்டோம் — லட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் நடக்கவிட்டு, ₹21,000 கோடிக்குப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டிக் கொண்டிருந்தது இந்திய அரசு.

இஸ்ரோவும் தப்பவில்லை

ஒப்பந்தமயமாக்கல் அடிநிலைப் பணி களில் மட்டும் நிற்கவில்லை. செவ்வாய் கிரக பயணத்தை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிறைவேற்றிய, ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பி உலக சாதனை படைத்த இஸ்ரோவில் இன்று விஞ்ஞானிகள் ஒத்துழையாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்; பணிகள் வெளி ஒப்பந்தத்திற்குவிடப்படுகின்றன. இதைக் கண்டு அதிர்ந்த இஸ்ரோவின் 16 ஊழியர் சங்கங்களும் இணைந்து “தயவுசெய்து இஸ்ரோவைக் காப்பாற்றுங்கள்” என அறிக்கை விட்டிருக்கின்றன — ஏனெனில் அந்தத் துறையில்முதலீடு செய்ய அதானியும் அம்பானியும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வெறும் அடிநிலைப் பணியாளர் மட்டுமல்ல, விஞ்ஞானியாக இருந்தாலும்மருத்துவராக இருந்தாலும் இன்று ஒப்பந்தமயமாக்கலிலிருந்து யாரும் தப்பவில்லை. நேற்று வேறொரு துறை இதே நிலைக்கு உள்ளானது; நாளை இஸ்ரோவும் அதே பாதையில் செல்லக்கூடும். பொதுத்துறை எந்த முறையிலும்தனியாருக்குப் போகக்கூடாது. தமிழ்நாடு அரசே தன் மின்சாரத் துறையில் மட்டும் 70,000 பேரை ஒப்பந்த அடிப்படையில் வைத்திருக்கிறது; திறன் மேம்பாட்டுக் கழகம் எனப் பலவிதப் பெயர்களில் இதே ஒப்பந்தமயமாக்கல்தொடர்கிறது.

கொள்ளை லாபமும் தொழிலாளியின் விலையும்

1990இல் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமானபோது இந்தியாவில் ஒரு பில்லியனர் கூட இருக்கவில்லை; இன்று உலகிலேயே பில்லியனர்கள் அதிகம் உள்ள மூன்றாவது நாடாக, முதல் ஆசியநாடாக இந்தியா உள்ளது — 216 பில்லியனர்கள். கோவிட் காலத்தில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கே பணம் பறித்த அதே முதலாளித்துவ அமைப்பு முறை, சாதாரணத் தொழிலாளிக்குச் சட்டம் நிர்ணயித்த அடிப்படைச் சம்பளத்தைக் கொடுக்க வழியில்லை என்கிறது — இதைச் சமூகப் பிரச்சினையாகவோ சட்டப்பிரச்சினையாகவோ பார்க்காமல் ஒவ்வொரு தொழிலாளியும் தனிப்பட்ட பிரச்சினையாகச் சந்திக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இத்தகைய மோசமான சூழலில், தொழிலாளி வர்க்கத்திற்கான மிகப்பெரும் சவால் ஒப்பந்தத் தொழிலாளியை மீட்பதே. வாழ்க்கை அடிக்கும் அடிகளில்சிதைந்து எப்படியாவது உயிர் வாழ்வதல்ல மனிதரின் இலக்கு; உரிமையோடு உண்டு உடுத்து வாழ வேண்டும்என்பதே அவருடைய கோரிக்கை. அந்த உரிமைக்காக, மகத்தான பணியைச் செய்கிற ஒரே இயக்கம் சிஐடியு.

போராட்டத்திற்கு வடிவம் கொடுப்போம்

தில்லி போராட்டங்கள் காட்டியதுபோல், எந்த நிமிடமும் வெடிக்கும் அளவுக்கான அழுத்தம்தொழிலாளர் மத்தியில் உருவாகிக்கொண்டி ருக்கிறது; அதற்குச் சரியான வடிவம் கொடுப்பதேநம் பொறுப்பு. எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்குள்ளேயே அரசியல் போராட்டத்தையும் நாம் நடத்த வேண்டியிருக்கிறது. சரியான நேரத்தில் இதை ஒரு மதிப்புமிக்க உரிமைப்போராட்டமாக மாற்றி, தொழிலையும் வளர்த்து, தொழிலாளர்களின் வாழ்வையும் மேம்படுத்திச் செல்வோம்.ஓசூரில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற ஒப்பந்த தொழிலாளர் சிறப்பு மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகள்