மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையே விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது! தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. பதிலடி
20 Aug 2026, 9:57 pm

மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையே விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது! தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. பதிலடி

சென்னை, ஆக. 20 -போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து, மாணவர்களை விலக்கி வைப்பதற்கான முயற்சிகளை இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பதாகவும், இதற்காக இடதுசாரிக் கட்சிகளை, தான் கடுமையாக கண்டிப்பதாகவும், பாஜக மூத்ததலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், அவரதுசமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “நம் குழந்தைகள் வகுப்பறைகள், புத்தகங்கள் மற்றும் கனவுகளுக்கு மட்டுமே சொந்தக் காரர்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்ட தெருப்போராட்டங்களுக்கும் சண்டைகளுக்கும் அல்ல என்றும், அவர்களின் அப்பாவித்தனமும் இளமை ஆற்றலும் ஒருபோதும் அரசியல் அணிதிரட்டலுக்கான கருவி யாக மாறக்கூடாது” என்றும் அவர்குறிப் பிட்டிருந்தார்.

அவரின் இந்த சமூகவலைதளப் பதிவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் பதிலளித்துள்ளார். அதில், ”மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமை வாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்டகாலத்தி லேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள்,” என்றும்; “அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது” என்றும்கூறியுள்ளார்.

தாக்க உத்தரவிட்டவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்!

“மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் (சங்-பரிவாரங்கள்) செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்தியமாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள். பெல்லட் குண்டுகளையும், ஆணி பொருத்திய லத்திகளையும்துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள்” என்று கூறியிருக்கும் சு.வெங்கடேசன், “ஆனால், மாணவர் களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்றகேள்வியை எதிர்கொள்ள முடியாமல் உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. இந்தஉண்மையை எதிர் கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்” என்றும் சாடியுள்ளார்.சங்கங்களை சங்கிகள் ஒன்றும் செய்ய முடியாதுமேலும், “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் - ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை சவுந்தர்ராஜனின் ‘எக்ஸ்’ தளபதிவும் ஒரே திசையில் மாணவர்களை யும், இடதுசாரிகளையும் குற்றம் சாட்டுகிறது. “திமாமி நக்சல்” (அறிவுஜீவி நக்சல்)என பிரதமர் பட்டம் சூட்டிய நபர்களின்பட்டியலைத் தயார் செய்ய துவங்கு கிறீர்கள்” என்று சுட்டிக்காட்டியிருக்கும் சு. வெங்கடேசன், “சங்கமாகச்செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது,” என்றும்; “அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக்காட்டுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.