தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவின் பன்முக அடையாளத்துக்கு எதிரான சுற்றறிக்கையை திரும்பப் பெறுக!

12 Jul 2026, 9:29 pm
இந்தியாவின் பன்முக அடையாளத்துக்கு எதிரான சுற்றறிக்கையை திரும்பப் பெறுக!

இந்தியாவின் பன்முக அடையாளத்துக்கு எதிரான சுற்றறிக்கையை திரும்பப் பெறுக!

மதுரை, ஜூலை 12 - இந்திய பன்முகப் பாரம்பரியத்துக்கு எதிராக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இந்திய நாட்டைப் பத்துக் கரங்களைக் கொண்ட துர்கையாக, தாமரை மலரில் உறையும் லட்சுமியாக, அறிவைத் தரும் சரஸ்வதியாக உருவகித்து எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை அனைத்து அரசு நிகழ்வுகளிலும் வரி நீங்காமல் அனைவரும் 3 நிமிடம் 10 வினாடிகள் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

3 ஆவது இடத்தில் மாநிலப் பாடல்கள்

இது இந்து ராஷ்டிர அரசியலின் அதிகாரப்பூர்வ முன்னெடுப்பு. பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒடிசா, வங்காளம் ஆகிய தேசிய இனங்கள், விந்திய, இமய மலைகள், யமுனை, கங்கை நதிகளென இந்தியாவின் பன்முக அடையாளத்தைப் புகழுக்குரிய வாக்கியமாக்கிய தேசிய கீதம் இரண்டாவதாக ஆக்கப்பட்டுள்ளது. மாநில வணக்கம், மொழி வணக்கப் பாடல்கள் மூன்றாவதாக உள்ளன. ஒற்றை இந்து மத அடையாளமே முதன்மையானது, இந்தியாவின் பன்முக அடையாளமும், மொழி அடையாளங்களும் அதன் பின்பே. பிற மத அடையாளங்களுக்கு எந்த இடமும் இல்லை என அறுதியிட்டுச் சொல்கிறது இந்த அறிவிப்பு.

பன்முக அடையாளத்துக்கு எதிரானது

இந்திய அரசியல் சாசனம் சொல்லும் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், இந்திய பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.