தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அஞ்சல் குறியீட்டில் தேவநாகரியைப் பயன்படுத்த அதிகாரம் கொடுத்தது யார்? தென்மண்டல அஞ்சல் துறைத்தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி

30 Oct 2026, 9:00 pm
அஞ்சல் குறியீட்டில் தேவநாகரியைப் பயன்படுத்த அதிகாரம் கொடுத்தது யார்? தென்மண்டல அஞ்சல் துறைத்தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி

அஞ்சல் குறியீட்டில் தேவநாகரியைப் பயன்படுத்த அதிகாரம் கொடுத்தது யார்?

தென்மண்டல அஞ்சல் துறைத்தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை, அக். 30 -இந்திய அஞ்சல்துறை, அஞ்சல்குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அராபிக் எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்திஇந்தியைத் திணிக்கும் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கை அஞ்சல் துறை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்றும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டாக வேண்டும் என்றும் தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவருக்குக் கடிதம்எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கை

தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தி லிருந்து 16/10/26 தேதியிட்டு வந்த அதிகாரப்பூர்வமான கடிதத்தின்முகவரியில்உள்ள அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) சர்வதேசஅராபிக் எண்களுக்குப் பதிலாகதேவநாகரி எண்களைப் பயன் படுத்தி அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தேன்.இந்திய அஞ்சல் துறையின் செயல்பாட்டு விதிகளின்படி, அஞ்சல் குறியீட்டு எண்கள் (PIN Codes) உலகளாவிய சர்வதேச எண்களை (0, 1, 2, 3...) பயன்படுத்தி குறிப்பிடப்படவேண்டும். இது இயந்திரங்களும்அஞ்சல் ஊழியர்களும் அஞ்சல்களை விரைவாக வரிசைப்படுத்த வும், பொதுமக்களால் எளிதில்புரிந்து கொள்ளவும் உருவாக்கப் பட்ட ஒரு சர்வதேச தரமாகும். மாறாக, தமிழ்நாட்டில் உள்ள உங்கள்அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் கடிதத்தில் தேவநாகரி எண்களைப் பயன்படுத்து வது அஞ்சல்துறை விதிகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், அஞ்சலகத்தின்மூலம் இந்தி திணிக்கும் வெளிப்படையான முயற்சியாகும்.

தெற்கு மண்டலத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக, இந்தி திணிப்பு போன்ற இத்தகைய முறையற்ற செயல்களில் உங்களது ஈடுபாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. உங்களது அதிகாரப்பூர்வ கடிதத் தொடர்பு களில் இந்த எண்களைப் பயன்படுத்துவதற்கு அஞ்சல்துறையின் எந்த உத்தரவு அல்லது இந்திய அரசின் எந்த அரசாணையின் கீழ்நீங்கள் இதைப் பயன்படுத்தினீர்கள் என்பதை எனக்குத் தெரிவிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.