தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை அஞ்சலகங்கள் மூடல் முயற்சி - சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

30 May 2026, 1:20 pm
மதுரை அஞ்சலகங்கள் மூடல் முயற்சி - சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

மதுரையில் அஞ்சலகங்கள் மூடல் முயற்சிக்குச் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாடு CPMG மற்றும் ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சருக்குக் சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மதுரையில் மிகச் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வரும் ரயில்வே DRM அலுவலகம் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் அஞ்சலகங்களை மூடும் முயற்சியை அஞ்சல் துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மதுரையின் மக்கள்தொகை 22 லட்சத்தைக் கடந்தும், 20 ஆண்டுகளாகப் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படவில்லை; மாறாக இருக்கும் அஞ்சலகங்களை மூடுவது அநீதி!

மிகக் குறைந்த 2 ஊழியர்களுடன் இயங்கும் DRM அலுவலக அஞ்சலகம், 3 மாதங்களில் 5,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2 கோடிக்கும் மேல் வைப்புத் தொகை திரட்டியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் அஞ்சலகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இத்தகைய அலுவலகங்களை மூடுவதற்கான நடவடிக்கை பொருத்தமான நடவடிக்கையாக இல்லை.

"தற்காலிக இணைப்பு" என்ற சாக்குப்போக்கில் அஞ்சலகங்களை மூடி, எளிய மக்களின் 'நிதிச் சேர்க்கை' (Financial Inclusion) உரிமையைப் பறிக்கக் கூடாது. பொதுமக்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அஞ்சலகங்கள் தொடர்ந்து அங்கேயே செயல்படுவதற்கான பொருத்தமான அறிவுறுத்தல்களை அலுவலர்களுக்கு வழங்கிடுமாறு ஒன்றிய அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.