தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“வந்தே மாதரத்தை” அனுமதிக்க மாட்டோம்; சட்டமன்ற மாண்பைக் காப்பது அனைவரின் கடமை

25 Jun 2026, 11:20 pm
“வந்தே மாதரத்தை” அனுமதிக்க மாட்டோம்; சட்டமன்ற மாண்பைக் காப்பது அனைவரின் கடமை

“வந்தே மாதரத்தை” அனுமதிக்க மாட்டோம்; சட்டமன்ற மாண்பைக் காப்பது அனைவரின் கடமை

மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!

மேலூர், ஜூன் 25- சட்டமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடப் படுவதை நிராகரித்து, மதச்சார்பற்ற மரபைக் காத்தது தமிழ்நாட்டின் முக்கிய வெற்றி என் றும்,அவையின் மாண்பைக் குலைக் கும் தனிநபர் விமர்சனங்களை ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு மையாகத் தவிர்க்க வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தெரிவித்துள்ளார். மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும், மேலூர் அரசு கலைக் கல்லூரியில் கட்டப் பட்டு வரும் மாணவர் உணவுக் கூடம் உள் ளிட்ட புதிய பணிகளை ஆய்வு செய்தும் சு. வெங்கடேசன் எம்.பி. புதனன்று செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற நேரலையும் தனிநபர் விமர்சனத் தவிர்ப்பும்

சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமை யாக நேரலை செய்யப்படுவது சாமானிய மக்களிடம் ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அவையில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் நேரடியாகப் பார்ப்ப தால், இது உறுப்பினர்களின் பொறுப்பு ணர்வை அதிகப்படுத்தும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கு நல்வாழ்த்துகள். அதேநேரம், சட்டமன்ற விவாதங்க ளின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது அனை வரின் கடமை. தனிநபர் சார்ந்த விமர்ச னங்கள் முழுமுற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு எல்லையே கிடை யாது; அப்படிப் பேசுவதற்குச் சட்ட மன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசிய மும் இல்லை. தமிழக சட்டமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தும் பொறுப்பு அனை வருக்கும், குறிப்பாக ஆளுங்கட்சிக்குக் கூடுதலாக இருக்கிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டைச் சட்ட மன்றக் குழுத் தலைவர் ஆர். செல்ல சுவாமி அவர்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். விவாதங்களின் சரி, தவறு களை மக்கள் பார்த்து முடிவு செய்வார்கள்.

‘வந்தே மாதரம்’ நிராகரிப்பும் மதச்சார்பற்ற மரபும்

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை, ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாய மாகப் பாடச் சொல்கிறது. இப்பாடலின் முதல் இரு சரணங்கள் பொதுவானவை; ஆனால் மூன்று, நான்கு, ஐந்தாம் சர ணங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட வுளை நாடாக வர்ணிக்கின்றன. ஒரு மதச்சார்பற்ற நாட்டிலோ அல்லது பிற மத நம்பிக்கையாளர்களை குறிப்பிட்ட மதக் கடவுளை வர்ணித்துப் பாடச் சொல்வது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில்கூட ஆளுநர்களின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி இப்பாடலுடன் நிகழ்ச்சி கள் தொடங்கும் நிலை உள்ளது. ஆனால், மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான சட்ட மன்றத்தில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அழுத்தத்தை நிராகரித்து, அது பாடப்படாமல் போனது தமிழகத்தின் மதச்சார்பற்ற மரபிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கடந்த காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாகத் தேசிய கீதத்தை முதன்மைப்படுத்த ஆளுநர் முயன்றபோது நாம் எதிர்த்தோம். தமிழ்த்தாய் வாழ்த்தா, தேசிய கீதமா என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இப்போது தேசிய கீதமா, வந்தே மாதரமா என்றால் நமது நாட்டுப்பண்ணான, மதச்சார்பற்ற தன்மையுடைய தேசிய கீதத்தின் பக்கமே நிற்போம். ‘வந்தே மாத ரத்தை’ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த மதச்சார்பற்ற அரசியல் வெற்றியை யாரும் திசைதிருப்பக் கூடாது.

கல்வி நிலையங்களில் அரசியல் தலையீடு கூடாது

கல்வி வளாகங்களுக்குள் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இத்தகைய கேள்விகள் எழும் என்பதை முன்கூட்டியே யோசித்து நடந்திருக்க வேண்டும். இவற்றுள் நேர்ந்த தவறுகளிலி ருந்து அனைவரும் அனுபவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், அரசுப் பள்ளிகளில் அந் தந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மட்டுமே ஆய்வு மேற் கொள்ள உரிய அதிகாரம் படைத்தவர் கள். மக்கள் பிரதிநிதிகள் அல்லாத ஆளுங்கட்சி யின் மாவட்டச் செயலாளர்களோ அல்லது மற்றவர்களோ அதிகார வரம்பை மீறி ஆய்வு என்ற பெயரில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.