பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி
13 Jul 2026, 10:17 pm
<p><strong>பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி</strong></p><p>மதுரை, ஜூலை 13- பாசிச அரசியலை எதிர் கொள்ள அனைத்து ஜன நாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தினார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து திரு மோகூர் அருகே மங்களபுரத் தில் திருமண மண்டபமும், மேலூர் ஒன்றியம் துவரங் குளம் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டிட மும் சுமார் ரூ.25 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டுள்ளன. கிராமப்புற மக் களின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்யும் வகை யில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. துவ ரங்குளம் கிராம மக்கள் கோரி யுள்ள பேருந்து வசதி உள் ளிட்ட பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள் ளேன். அவற்றுக்கு விரை வில் தீர்வு காணப்படும். பூமணி மறைவுக்கு இரங்கல் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பூமணி மறைவு மிகுந்த துய ரத்தை அளிக்கிறது. ‘வெக்கை’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட சிறந்த நாவல்கள் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை வலி மையாக பதிவு செய்தவர். அவருக்கு அரசு மரியாதை வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரி விப்பதோடு, அவரது குடும் பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தை பாது காக்க, பாசிச அரசியலுக்கு எதிராக அனைத்து ஜன நாயக சக்திகளும் ஒன்றி ணைய வேண்டும். இது தேர் தலை மட்டுமே மையமாகக் கொண்டதல்ல; நாட்டின் சமூக மற்றும் அரசியல் எதிர் காலத்துடன் தொடர்புடை யது. பாஜகவை எதிர்ப்ப தாகக் கூறும் அரசியல் சக்தி கள் எந்த அடிப்படையில் ஒன்றிணைகின்றன என்பதே முக்கியமானது என்றார். பாஜகவின் புதிய அரசி யல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “ஒரு நிறுவனத்தின் வியாபாரம் சரியாக நடை பெறாதபோது புதிய கிளை யைத் தொடங்குவது போலவே இதையும் பார்க்கி றேன். அவர்கள் உருவாக் கும் புதிய அரசியல் முயற்சி கள் குறித்து கூறுவதற்கு எது வும் இல்லை” என்று சு. வெங்கடேசன் தெரிவித்தார்.</p>
