உலகக்கோப்பை கால்பந்து வாடிக்கையாளர்களைச் சுரண்டும் ஓடிடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!
14 Jun 2026, 9:17 pm

உலகக்கோப்பை கால்பந்து வாடிக்கையாளர்களைச் சுரண்டும் ஓடிடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

மதுரை, ஜூன் 14 - உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, சந்தா திட்டங்களின் ‘சாதனங்களின் வரம்பை’ (Device Limit) திடீ ரெனக் குறைத்து வாடிக்கை யாளர்களைச் சுரண்டும் ஓடிடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தன்னிச்சையான விதிமுறை மாற்றமும் சுரண்டலும்

அக்கடிதத்தில், “தற்போது நடைபெற்று வரும் பிபா உலகக்கோப்பை 2026 கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பும் ஜீ 5 (ZEE 5) போன்ற டிஜிட்டல் தளங்கள், போட்டி தொடங்குவதற்குச் சில நாட் களுக்கு முன்பு (ஜூன் 11) தங்களின் சந்தா விதிமுறைகளில் தன்னிச்சையான மாற்றங் களைச் செய்துள்ளன. இதன்படி, ரூ.799 திட்டத்தில் 3 சாதனங்களுக்குப் பதி லாக ஒரு சாதனத்திலும், ரூ.1,699 திட்டத்தில் 4 சாதனங்களுக்குப் பதிலாக 2 சாதனங்களில் மட்டுமே போட்டிகளைக் காண முடியும் எனக் கட்டுப்பாடு விதிக் கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படை யில் சந்தா செலுத்தியுள்ள சூழலில், இத்தகைய தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத் தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முர ணான ‘தவறான வர்த்தக நடைமுறை’ யாகும். எனவே, போட்டிக்குச் சில நாட் களுக்கு முன்பு இத்தகைய கட்டுப்பாடு களை விதித்ததன் பின்னணி குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கோர வேண்டும். முக்கிய விளையாட்டு நிகழ்வு களின் போது ஓடிடி தளங்கள் தன்னிச்சை யாக விதிமுறைகளை மாற்றி நுகர்வோரை சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருக்கத் தகுந்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த வர்த்தக நடைமுறை குறித்து உரிய விசார ணை நடத்த ஒன்றிய அரசு உடனடி யாகத் தலையிட வேண்டும்” என சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.