தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.81 லட்சம் மதிப்பிலான 21 மேம்பாட்டுப் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. திறந்து வைத்தார்

15 Jul 2026, 9:22 pm
ரூ.81 லட்சம் மதிப்பிலான 21 மேம்பாட்டுப் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. திறந்து வைத்தார்

ரூ.81 லட்சம் மதிப்பிலான 21 மேம்பாட்டுப் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. திறந்து வைத்தார்

மதுரை, ஜூலை 15- மதுரை மேற்கு சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 2025–26 நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.81 லட்சம் மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 21 மேம்பாட் டுப் பணிகளை மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாய்க் கிழமை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத் தார்.

மேலமாத்தூரில் பெருந் தலைவர் காமராஜர் திறந்து வைத்திருந்த பழைய வாசக சாலை புதுப்பிக்கப்பட்டு, நிழற்குடையுடன் புதிய கட்டி டமாக திறக்கப்பட்டது. மேலும் துவரிமான், பைக் காரா மெயின் ரோடு, பழங்கா நத்தம், திருப்பரங்குன்றம், பொன்மேனி, எச்எம்எஸ் காலனி, பி.பி. சாவடி, விளா ங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்கு கள் மற்றும் பல்வேறு அடிப் படை வசதிப் பணிகளும் மக் கள் பயன்பாட்டிற்கு அர்ப்ப ணிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின், மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன், பகுதிச் செய லாளர்கள் பி.வீரமணி, ஏ.எஸ்.செந்தில்குமார், வி. கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கு.கணே சன், மாமன்ற உறுப்பினர் சி. நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சு.வெங்க டேசன், நாடாளுமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மக்களின் அன் றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பயனுள்ள திட்டங் களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக, முதலில் புகார் அளித்தது மாநகராட்சி ஆணையரே என்றும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சிறப்பு விசாரணைக் குழு அமைத் துள்ள நிலையில் விசாரணை யை விரைந்து முடித்து தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி னார்.

அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டு வது சரியான அணுகுமுறை அல்ல என்றும் குறிப்பிட்டார். அவர்லேண்ட் நிறுவனம் தொடர்பான முறைகேடு குற் றச்சாட்டுகளை முதலில் சுட்டிக்காட்டியது சிபிஎம் என்றும், அந்த விவகாரத்தி லும் முழுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மதுரையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, மழைப்பொழிவு குறைவு, வைகை அணை நீர்மட்ட சரிவு மற்றும் குடிநீர் தட் டுப்பாடு குறித்து கவலை தெரிவித்த அவர், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாநில, ஒன்றிய அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங் கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் என்றார்.

மேலும், கழிவு மேலா ண்மையில் அறிவியல் முறை களைப் பயன்படுத்தி மக் கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக கையாள வேண்டும் என்றும், தூய் மைப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல னுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.

அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மக்கள் நலத் திட் டங்களை சிபிஎம் தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், “ஒரே நாடு–ஒரே தேர்தல்” திட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது; அதை ஜன நாயக சக்திகள் இணைந்து எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.