‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பிலான நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
yesterday

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பிலான நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும்!

ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மதுரை, நவ. 3 – நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜேபிசி) பரிசீலனையில் உள்ள ‘ஒரே நாடு,

ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில், ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.இது கூட்டுக்குழுவின் அதிகார வரம்பை மீறும் செயல் என்றும், இந்நிகழ்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஒன்றிய இளைஞர் நலன்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், மக்களவைத் தலைவர், நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர் ஆகிய மூவருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். நிகழ்வுகளுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார். நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இந்த நிகழ்வுகளைநடத்துவது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என்றும் அவர் சாடியுஉள்ளார்.

சட்டவடிவம் பெறாத கோட்பாடு

அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மை பாரத்’ (MY Bharat) அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ‘விக்சித் பாரத் இளைஞர் நாடாளுமன்றம்’ என்ற பெயரில், ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ தலைப்பில் நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான சட்ட முன்வடிவு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் முறைப்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் தீவிரப் பரிசீலனையிலும் சட்டப்பூர்வ ஆய்விலும் உள்ளது. நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள ஒரு வழக்கைப் போலவே, நாடாளுமன்றக் குழுவின் ஆய்வில் உள்ள ஒரு விவகாரத்திலும் வெளியே முடிவுகளைத் திணிப்பது முறையல்ல. கூட்டுக்குழு ஆய்வை முடித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, அரசியலமைப்புத் திருத்த நடைமுறைகள் நிறைவடையும் வரை இக்கோட்பாடு சட்டவடிவம் பெறாத ஒன்றே.

நாடாளுமன்றத்தில் இறுதி செய்யப்படாத ஒரு விவகாரத்தில், ஒரு நிர்வாக அமைச்சகமே நேரடியாகத் தலையிட்டு நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்றங்களை நடத்துவது நாடாளுமன்ற மரபுகளுக்கும், கூட்டுக்குழுவின் சுயேச்சையான அதிகார வரம்புக்கும் முற்றிலும் எதிரானது. சட்டம் இயற்றப்படும் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ அமைப்புகளைப் பயன்படுத்தி இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது, ஆளும் கட்சியின் அரசியல் திட்டத்தை மாணவர்கள் மத்தியில் திணிக்கும் நிர்வாக மீறலாகும்.எனவே, இந்நிகழ்வுகள் அனைத்தையும் உடனடியாக ரத்து

செய்வதுடன், இதற்கு உத்தரவிட்ட அமைச்சகத்தின் பொறுப்புள்ள உயர் அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றஜனநாயக மரபுகளைப் பாதுகாக்க அமைச்சர் உடனடியாக இதில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் கண்ணியம்

மக்களவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ‘மை பாரத்’ அமைப்பின் இந்த நிகழ்வுகள் குறித்து விளக்கியுள்ள சு. வெங்கடேசன், “ஒரு நிர்வாக அமைச்சகமே நேரடியாகத் தலையிட்டு நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்றங்களை நடத்துவது, நாடாளுமன்றத்தின் உன்னதமான மரபுகளுக்கு முற்றிலும் புறம்பானது. கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, இது தொடர்பான கொள்கை முடிவோ சட்டஅங்கீகாரமோ இறுதி செய்யப்படவில்லை. நாடாளுமன்ற நடைமுறைகள் நிறைவடையும் முன்பே அரசு அமைப்புகள் மூலம் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது, நாடாளுமன்றத்தின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் குறைப்பதாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மக்களவைத் தலைவர் உடனடியாகத் தலையிட்டு, இந்நிகழ்வுகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தவும், இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தவறான முன்னுதாரணம்

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் குழுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “கூட்டுக்குழுவின் தீவிரப் பரிசீலனையிலும் விவாதத்திலும் உள்ள அதே தலைப்பில், ‘மை பாரத்’ அமைப்பு நாடு முழுவதும்மாணவர்களிடையே இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இது ஒரு முக்கியமான விதிமீறல். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட உயரிய அமைப்பான இக்குழு தனதுஇறுதி அறிக்கையையோ பரிந்துரைகளையோ இன்னும் தாக்கல் செய்யவில்லை. அதற்குள் ஓர் அரசு அமைச்சகமே முன்வந்து இதே தலைப்பில் இளைஞர் நாடாளுமன்றங்களை நடத்துவது, கூட்டுக்குழுவின்அதிகார வரம்பையும் உரிமையையும் மீறும் செயல். இது குழுவின் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதோடு, தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும்” என்று தெரிவித்துஉள்ளார்.

அதில் அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:

• கூட்டுக்குழுவின் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்ட அமைச்சக அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்துக்குப்பரிந்துரைக்க வேண்டும்.

• கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, இத்தலைப்பில் இளைஞர் நாடாளுமன்றம் அல்லது பிரச்சார நிகழ்வுகள் எதையும் நடத்தக் கூடாது என இளைஞர் நல அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.குழுத் தலைவரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.