தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி அவசர நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

6 Jun 2026, 9:28 pm
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி அவசர நடவடிக்கை எடுக்க  சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை
<p><strong>தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி அவசர நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை</strong></p><p>மதுரை, ஜூன் 6 - ​தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான முதன்மை நுழைவாயிலாக விளங்கும் தாம்பரம் ரயில் முனையத்தில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நாள்தோறும் சுமார் 1.6 லட்சம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்ச னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் போர்க்கால அடிப்படையில் உடனடி யாகத் தலையிட்டு நடவ டிக்கை எடுக்கக் கோரி மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதி யுள்ளார். அவர் அனுப்பிய கடிதத் தில், “தென் மாவட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படும் முக்கிய நடைமேடைகளில் (5 முதல் 11 வரை) மின் தூக்கி களோ, நகரும் படிக் கட்டுகளோ இல்லை. இத னால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் செங்குத்தான மேம்பா லங்களில் உடமைகளுடன் ஏறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இங்கு போர்க்கால அடிப்படையில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். ​தற்போதிருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பேட்டரி கார்கள் பயணி களை படிக்கட்டுகளின் அடி வாரம் வரை மட்டுமே இறக்கி விடுகின்றன. இதனால் முதி யவர்கள் மீதி தூரத்தை நடந்து கடக்க வேண்டி யுள்ளது. இந்தச் சேவையை மேம்படுத்தி, பயணிகள் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு நுழைவாயில் களையும் தடையின்றி சென் றடையும் வகையில் பிரத் யேகப் பாதைகளுடன் பேட்டரி கார்களை இயக்க வேண்டும். ​தாம்பரம் ரயில் நிலை யத்தின் நீண்ட கால மறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஒரு புறமிருந்தாலும், பயணி களின் அன்றாடத் துயரங் களைத் தீர்க்க அவசர நிதியுத வியின் கீழ் இந்த நகர்வு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.