தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உச்ச நீதிமன்றத்தைக் காட்டி குற்றம் மறைப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்க! சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

5 Oct 2026, 10:19 pm
உச்ச நீதிமன்றத்தைக் காட்டி குற்றம் மறைப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்க! சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

உச்ச நீதிமன்றத்தைக் காட்டி குற்றம் மறைப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்க!

சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை, அக். 5 -வாக்காளர் சேர்ப்புக்கான படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ள பின்னணியில், ஞானேஷ் குமாரை கைது செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறித்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6ஐத் திருத்தியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26 அன்று, விளக்கம் அளித்த இந்தியத் தேர்தல் ஆணையம், படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

ஆனால், திங்கட்கிழமை (அக்.5) அன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ்குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.