தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியல் சாதி மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.30,413 கோடி செலவிடப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

yesterday
பட்டியல் சாதி மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.30,413 கோடி செலவிடப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

ஒன்றிய அரசின் பட்டியல் சாதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும், செலவினத்திற்கும் இடையே ரூ.30,413 கோடி வித்தியாசம் இருப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பட்டியல் சாதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 2025-26ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? பட்டியல் சாதி துணைத் திட்டத்தின் நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன? 2025-26ஆம் ஆண்டில் இதுவரை எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பன உள்ளிட்ட கேள்விகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, 2025-26ஆம் நிதியாண்டில் பட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டிற்காக 38 அமைச்சகங்களின் 239 திட்டங்களுக்கு ரூ.1,68,482 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சகங்களுக்கான மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.11,61,830 கோடியில் இது 14.5 சதவீதமாகும். இத்திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ளதாகவும், இதுதொடர்பாக 29.04.2025 அன்று அமைச்சர் தலைமையிலும், 25.08.2025 மற்றும் 16.04.2026 ஆகிய தேதிகளில் துறைச் செயலாளர் தலைமையிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2025-26ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.1,61,201.98 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 38 அமைச்சகங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ரூ.1,38,068.85 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:

எஸ்சி, எஸ்டி துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடும், செலவினமும் எப்போதுமே அத்திட்டங்களுக்கான நெறிமுறைகளின் அடிப்படையில் அமைவதில்லை. அமைச்சர் அளித்துள்ள பதிலும் அதையே நிரூபிக்கிறது.

ஒதுக்கீடு 14.5 சதவீதம் என்று தெரிவித்துள்ள அமைச்சர், ஒட்டுமொத்த திட்டச் செலவு என்று குறிப்பிடாமல், பட்டியல் சாதி மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சகங்களின் மொத்த திட்டச் செலவில் இந்த சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒட்டுமொத்த திட்டச் செலவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ள சதவீதத்தைவிட குறைவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது துணைத் திட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும்.

பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் இடையே ரூ.7,200 கோடி வித்தியாசம் உள்ளது. அதேபோல், பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் அமைச்சகங்கள் உண்மையில் செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ள தொகைக்கும் இடையே ரூ.30,400 கோடி வித்தியாசம் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

துணைத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை சட்டபூர்வமாக உறுதி செய்ய சிறப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பது இடதுசாரிகள், சமூக நீதி அமைப்புகள் மற்றும் தலித் அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. தற்போதைய நிலை அந்தக் கோரிக்கையின் அவசியத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

வளர்ச்சி இடைவெளிகளைச் சரிசெய்வதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட துணைத் திட்டங்களின் நெறிமுறைகளே இன்றளவும் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், எவ்வாறு வளர்ச்சி இடைவெளிகளைச் சரிசெய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது” என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.