பதிலளிக்காமல் பிரதமர் போல் ஒளிந்து கொள்வதல்ல; அறவழியில் போராடுவதே துணிச்சல்!
21 Jul 2026, 9:16 pm

பதிலளிக்காமல் பிரதமர் போல் ஒளிந்து கொள்வதல்ல; அறவழியில் போராடுவதே துணிச்சல்!

புதுதில்லி, ஜூலை 21 - ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், சிஜேபி-யின் தலைவர் அப்ஜித் தீப்கே மற்றும் எஸ்எப்ஐ தலை வர்களை, இடதுசாரி நாடாளு மன்ற உறுப்பினர்கள், கே.ராதா கிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்டோர் செவ்வாயன்று நேரில் சந்தித்து, தங்களின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தனர்.

இதன்பின், சு. வெங்கடேசன் எம்.பி. தமது சமூகவலைதளப் பக்க த்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: நீட் தேர்வு எனும் வன்முறை, வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை (NTA) மாணவர்களுக்குத் தொடர்ந்து இழைத்துவரும் அநீதி ஆகியவற்றுக்கு எதிராக தில்லியை உலுக்கும் போராட்டத்தை மாண வர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதுகுறித்துத் தேசத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டிய பிரதமர், நாடாளுமன்றத்தில் பேசாமல் என்டிஏ (NDA) கூட்டத்தை நடத்தி அங்கே பேசியிருக்கிறார்.

நீட் உயிர்ப்பலிகளுக்கு யார் பொறுப்பு?

பிரதமர் அவர்களே, துணிச்சல் என்பது அறவழியில் போராடும் மாணவர்களை அடித்து நொறுக்கு வதல்ல; நாடாளுமன்றத்திற்கு வந்து தேசத்தின் முன் உண்மையைப் பேசுவது. வினாத்தாள் கசிவுக்கும் அதன் காரணமாகப் பலியான உயிர்களுக்கும் யார் பொறுப்பு எனக் கூறுவது.

இவ்வளவு அநீதிக்குப் பிறகும் நீங்கள் நீட் தேர்வு முறையையும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்பதற்கான நியாயத்தைப் பேசுங்கள். உங்களி டம் விளக்கம் தர உண்மைகள் இல்லாததால் லத்திகளாலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளா லும் விளக்கம் தந்து கொண்டி ருக்கிறீர்கள்.

தேசத்தின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

நடைபெற்ற தவறுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டதற்கு பிரதமராகிய நீங்களும், உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். இதனை வலியுறுத்தித் தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.