தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு; தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

15 May 2026, 1:52 pm
பெட்ரோல் டீசல் விலை உயர்வு; தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலையுயர்வை திரும்பப் பெற வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனம்.

ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதுபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது.

இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது.

தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு.

உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.