தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் மறுதேர்விலும் தொடரும் என்டிஏ-வின் குளறுபடிகள்!

15 Jun 2026, 9:00 pm
நீட் மறுதேர்விலும் தொடரும்  என்டிஏ-வின் குளறுபடிகள்!

நீட் மறுதேர்விலும் தொடரும் என்டிஏ-வின் குளறுபடிகள்!

சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

மதுரை, ஜூன் 15 - நீட் மறுதேர்வு நடைமுறைகளிலும், தேசிய தேர்வு முகமை (NTA) குளறுபடிகளை அரங்கேற்றியிருப்ப தற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நுழைவுச் சீட்டு தரவிறக்கம்

மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், ஜூன் 21 அன்று நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு (Admit Card) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதனைப் பதிவிறக்கம் செய்ய முயலும் மாணவர்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை மீண்டும் உறுதி செய்யுமாறு என்.டி.ஏ (NTA) இணையதளம் கட்டாயப்படுத்துகிறது.

முடங்கி விடும் இணையதளம்

ஆனால், அந்த இணைப்பைக் கிளிக் செய்தால், ஏற்கெனவே பதிவு செய்த வங்கி விவரங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன் இருக்கும் ‘Edit & Proceed’ பொத்தானைக் கிளிக் செய்தால், இணையதளம் முடங்கி விடுகிறது.

பிறகு மீண்டும் உள்நுழையும்போது, “நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர விரும்பவில்லை” (You have agreed not to provide bank details) என்று தவறாகக் காட்டி, நுழைவுச்சீட்டை மட்டும் பதிவிறக்கம் செய்யும் நிலையை என்.டி.ஏ. உருவாக்கியுள்ளது.

வங்கிக் கணக்கு விவரங்கள் எங்கே?

ஞாயிற்றுக்கிழமை 7 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை 4 லட்சம் பேர் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ததாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோரின் வங்கி விவரங்கள் மாயமாகியுள்ளன.

இதனால், தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள் ளது. கட்டணத்தைத் திருப்பித் தருவோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த என்.டி.ஏ. அதைத் தராமல் இருக்கவே இந்தத் திட்டமிட்ட மோசடியைச் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும்

எனவே, தேசிய தேர்வு முகமையானது, ‘1. நுழைவுச்சீட்டுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நீக்க வேண்டும்; 2. அனைத்து மாணவர்களும் கட்டணத்தைத் திரும்பப் பெற ஏதுவாக, வங்கி விவரங்களைப் பதிவேற்றும் வசதி யைத் தனியாக வழங்க வேண்டும்; 3. இந்த வசதியை மறுதேர்வு முடிந்த பிறகு இரண்டு வாரங்கள் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்; 4. இது குறித்து முறையான, வெளிப்படையான அறிவிப்பை என்.டி.ஏ வெளியிட வேண்டும்’ என கோரிக்கை விடுக்கிறேன்.

ஏற்கெனவே தேர்வு ரத்தானதால் மன உளைச்சலிலும், அச்சத்திலும் இருக்கும் மாணவர்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள். இவ்விவகாரத்தில் உரிய தீர்வுகளை விரைந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.