தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊடக அவதூறுகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!‘5 கோடி மக்களின் சுகாதாரத்தை 21 நிறுவனங்களின் லாபத்திற்காக ஒப்படைக்கக் கூடாது!’

29 Jun 2026, 9:51 pm
ஊடக அவதூறுகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!‘5 கோடி மக்களின் சுகாதாரத்தை 21 நிறுவனங்களின் லாபத்திற்காக ஒப்படைக்கக் கூடாது!’

ஊடக அவதூறுகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!‘5 கோடி மக்களின் சுகாதாரத்தை 21 நிறுவனங்களின் லாபத்திற்காக ஒப்படைக்கக் கூடாது!’

மதுரை, ஜூன் 29 - மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பேசி யதை, உண்மைக்கு மாறாகத் திரித்து வெளியிட்ட பத்திரிகைச் செய்திக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், 5 கோடி நகர்ப்புற மக்களின் சுகாதார நல வாழ்வை வெறும் 21 தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக ஒப்படைக்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திங்களன்று மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்குப் பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மத்திய-2 பகுதிக் குழுச் செயலாளர் பி.கோபிநாத் ஆகியோருடன் இணைந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஊடக அறமற்றச் செயலுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘கடந்த கால ஆட்சியில் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன’ என்று சு. வெங்கடேசன் பேசியதாகப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளி யானது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்புத் தெரிவித்த சு. வெங்கடேசன், “இது முற்றிலும் தவறான, அபாண்டமான செய்தி. அந்த ஆய்வுக் கூட்டத்தில் நாங்கள் பேசிய வெவ்வேறு விபரங்களைச் சம்பந்தமே இல்லாமல் வெட்டி ஒட்டி, முற்றிலும் வேறொரு அர்த்தம் வரும்படி அந்தச் செய்தி திட்டமிட்டு வெளியிடப் பட்டுள்ளது. ஊடக அறத்திற்கு மாறான இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உண்மை விபரங்கள்

அந்த ஆய்வுக் கூட்டத்தில் மிக முக்கியமான இரண்டு மக்கள் பிரச்சனைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட சு. வெங்கடேசன் அவை குறித்தும் விளக்கினார்:

1. பயனாளிகள் தேர்வு முறைகேடு புகார்:

கடந்த ஆட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளுக்கான பயனாளிகள் விதிகளுக்குப் புறம்பாகத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி, ஒட்டுமொத்தப் பட்டியலையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது, “கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் கற்காலம், இப்போது நடப்பது பொற்காலம் என்ற அரசியல் அணுகுமுறை கூடாது. வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள உண்மையான வீடற்ற பயனாளிகள் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டிருந்தால், அந்தப் பட்டியல் தொடர வேண்டும். விதிகளை மீறி யாராவது சொகுசுதாரர்கள் புகுந்திருந்தால் மட்டுமே அதனைப் பரிசீலித்து புதிய பயனாளி களைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

2. ‘அவர்லேண்ட்’ நிறுவன குப்பை அகற்றுதல் முறைகேடு:

மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘அவர்லேண்ட்’ என்ற தனியார் நிறுவனத் திற்கு அவுட்சோர்சிங் முறையில் அரசு வழங்கியிருந்தது. முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே மையமாக வைத்துச் செயல் படும் அந்த நிறுவனத்தால், மதுரை மாநகரமே குப்பைகளின் நகரமாக மாறியுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் விசிக உள்ளிட்ட அமைப்புகள் கடந்த ஓராண்டாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தினசரி 916 டன் குப்பைகளை அள்ள வேண்டிய அந்த நிறுவனம், பில்களில் கணக்குக் காட்டுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட டன் மண்ணை லாரிகளில் ஏற்றிச் சென்று கொட்டிப் பெருமளவில் முறைகேடு செய்துள்ளது. இதுகுறித்துக் கடந்த ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தி லேயே நாங்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆய்வுக் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் இரவு கூட, தூய்மைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட இரு லாரிகளில் முழுக்க முழுக்க மண் அள்ளிச் சென்றதை வாலிபர் சங்கத் தோழர்கள் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் கூட்டத்தில் கடுமை யான கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பது போன்ற சூழல் எதனால்?

இந்த விவகாரத்தில் அடுத்த நாள் மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறுப்பு அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதை வரவேற்பதாகக் கூறிய சு. வெங்கடேசன் எம்.பி., இந்தச் சொல் செயல்வடிவம் பெற வேண்டும் என்றார். மேலும், ‘அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பது’ குறித்த உண்மை நிலையைக் குறிப்பிட்ட அவர், “இந்தத் தனியார்மய விதிகளே கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமானவைதான். டெண்டர் ஒப்பந்தங்கள் அனைத்தும் மாநிலத் தலைமையகத்தில் போடப் படுவதால், மாநகராட்சியின் உள்ளூர் அதிகாரிகளுக்கு அந்தத் தனியார் நிறுவனம் கட்டுப்படுவதே இல்லை. இதனால்தான் எத்தனை ஊழியர்கள் வேலைக்கு வருகிறார்கள், அவர்களுக்கு என்ன சம்பளம் தரப்படுகிறது, எத்தனை வாகனங்கள் இயக்கப் படுகின்றன என்பதில் எவ்விதக் கண்காணிப்பும் இன்றித் தொடர் முறைகேடுகள் நடக்கின்றன” என்றார்.

தூய்மைப் பணி தனியார்மய அரசாணையை ரத்து செய்க!

தமிழ்நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில் சுமார் 5 கோடி பேர் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். இந்த 5 கோடி மக்க ளின் சுகாதாரப் பராமரிப்பை வெறும் 21 தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்காகத் தாரை வார்ப்பது மிக மோசமான மக்கள் விரோதச் செயலாகும். உண்மையான கார்ப்பரேட் கொள்ளையை மூடிமறைத்து, மக்கள் பிரதிநிதிகளின் பேச்சைத் திசைதிருப்பும் செய்திகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார். எனவே, இந்த அரசு தூய்மைப் பணியைத் தனியாருக்குக் கொடுக்கும் தவறான கொள்கை முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அதற்கான அரசாணையை முழுமை யாக ரத்து செய்து தூய்மைப் பணிகளை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. திட்டவட்ட மாக வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.