தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மும்மொழிக் கொள்கையின் உண்மை முகம் அம்பலம்: சமஸ்கிருத ஆசிரியர்களே அதிகம் – சு.வெங்கடேசன்

yesterday
மும்மொழிக் கொள்கையின் உண்மை முகம் அம்பலம்: சமஸ்கிருத ஆசிரியர்களே அதிகம் – சு.வெங்கடேசன்

மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை நோக்கமாகக் கொண்டதே தவிர, மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் அல்ல என்பதை ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்துள்ள நாடாளுமன்றப் பதிலே அம்பலப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பி.எம்.ஶ்ரீ (PM SHRI) பள்ளிகள் நாடு முழுவதும் எத்தனை உள்ளன, அவற்றில் இந்தியல்லாத மொழிகளுக்காக எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13,092 பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியல்லாத மொழிகளுக்கான ஆசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது ஆசிரியர்கள் 1,994 பேரும், மாநில மொழிகளுக்காக 9,152 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி., பி.எம்.ஶ்ரீ திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவது இந்திய மொழிகள் மற்றும் மாநில மொழிகளை வளர்ப்பதற்காகவே என்று ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக எண்ணிக்கையில், அதாவது 6,102 பேர் நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் பேசும் மொழி சமஸ்கிருதம். 24,821 பேர் மட்டுமே, அதாவது 0.002 சதவீத மக்கள் மட்டுமே சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். அத்தகைய மொழிக்காக 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, மும்மொழிக் கொள்கையின் உண்மையான நோக்கம் சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதே என்பதை தெளிவுபடுத்துகிறது.

இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் படிப்பவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டாலும், அது ஒரு சதவீதத்தை எட்டுவதில்லை; கால் சதவீதம் மட்டுமே. அதேநேரத்தில், இந்தி ஏற்கனவே ஆதிக்க மொழியாக திணிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சரின் பதிலில் 'மாநில மொழிகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை, அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளையே குறிக்கிறது. வேறு மாநில மொழிகளுக்கான நியமனங்கள் என்றால், அவை தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 944 பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் உள்ள நிலையில், 1,211 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் பெரும்பாலான பி.எம்.ஶ்ரீ பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இந்தப் பதிலின் மூலம் உறுதியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையும், பி.எம்.ஶ்ரீ பள்ளிகளும் தாய்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதற்காகவே என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் அந்தக் கூற்றை முழுமையாக மறுப்பதாக அமைந்துள்ளன என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.