தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் விவகாரம்: பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏமாற்று வேலை

23 Jul 2026, 9:38 pm
நீட் விவகாரம்: பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏமாற்று வேலை

நீட் விவகாரம்: பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏமாற்று வேலை

சு.வெங்கடேசன் எம்.பி. கடும் விமர்சனம் புதுதில்லி, ஜூலை 23 - நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேடுகளைக் கண்டித்து நாடு முழு வதும் மாணவர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளி யிட்டுள்ள அறிவிப்புக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீண்டும் ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல் செய்து உள்ளார்.

பிரதமரின் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் விமர்சனம்

தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங் களைத் தொடர்ந்து, வேகமான நீதி மன்றங்கள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். இதற்குப் பதிலடி கொடுத் துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., தனது எக்ஸ் (X) பதிவில், “மாண வர்களின் போராட்டம் தூக்கத்தில் இருந்த பிரதமரை எழுப்பியது பாராட்டத்தக்கது. ஆனால், அவரது பதிவில் மாணவர்களின் கோரிக்கை கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. கல்வி அமைப்பைச் சிதைத்த தர்மேந்திர பிரதான் மீதும் பிரதமர் மீதும் நம்பிக்கை இழந்ததால்தான் மாணவர்கள் தெருக்களுக்கு வந்த னர். அதே அமைச்சரை நீக்காமல் ‘தவறு செய்தவர்களை விடமாட் டோம்’ எனக் கூறுவது ஏமாற்று. அமைதியாகப் போராடிய மாணவர் களைத் தாக்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை எந்த சமாளிப்பும் நம்பிக்கை ஏற்படுத்தாது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்

இதனிடையே, நாடாளுமன்ற மக்க ளவையில் நீட் தேர்வு ஊழல் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நான்காவது நாளாக ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள பதிவுகளில், “பிரதமரே, முகநூலில் அல்ல... மக்களவைக்கு வந்து விளக்கம் தாருங்கள். மாண வர்கள் மீது இத்தனை கொடிய தாக்கு தலை அமித் ஷா ஏன் ஏவினார்? இத்தனை உயிர் பலிகளுக்குப் பிறகும் தர்மேந்திர பிரதான் ஏன் பதவி நீடிக்க வேண்டும்? இவ்வளவுக்குப் பிறகும் ஏன் நீட் தேர்வு தேவை?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார். “மாணவர்களுக்கு நீதி கிடைக் கும் வரை எமது போராட்டம் தொடரும்” என சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.