பல்துறை ஆளுமை ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பாராட்டு விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி. புகழாரம்!
19 Mar 2026, 3:18 pm
<p><strong>பல்துறை ஆளுமை ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பாராட்டு விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி. புகழாரம்!</strong></p>
<p>சென்னை, மார்ச் 19 - “நாவல் ஒன்றைத் தவிர அனைத்து வகை எழுத்துகளையும் எழுதி வருபவர் ச.தமிழ்ச்செல்வன். எதை எழுதினாலும் வெறும் போக்கி லோ அல்லது மேலோட்டமாகவோ எழு தாமல், ஆழ்ந்த பொறுப்புணர்வோடு படைத்து வருபவர் அவர். பல்துறை யிலும் இயங்கும் மற்றொரு தமிழ் எழுத்தாளரை இவருக்கு இணையாக யோசிக்க முடியவில்லை. அந்த வகையில் அரிய எழுத்தாளராகத் திகழ்கிறார் தமிழ்ச்செல்வன்” என்று தமுஎகச மதிப்புறு தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் புகழாரம் சூட்டினார். தமிழ் மொழியில் 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான ச.தமிழ்ச்செ ல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பாரதி புத்தகால யம் சார்பில் புதனன்று(மார்ச் 18) சென்னை அரும்பு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. தமுஎகச முன்னோடியும் மூத்த படைப்பாளியு மான சிகரம் ச.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எதிர்வினைகளால் முறியடிக்கப்பட்ட அரசியல் குறுக்கீடு நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய சு.வெங்கடேசன் எம்.பி., இந்த விருது அறிவிப்புக்கு பின்னால் இருந்த அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி னார். ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை திட்டமிட்டு குறுக்கிட்டு நிறுத்தி வைத்திருந்த விருதுகள், இப்போது எவ்வித மாற்றமுமின்றி அப்படியே அறிவிக்கப்பட்டிருப்பதற்குத் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட மிக வலுவான எதிர்வினைகளே காரணம் என்றார். மேலும், 1989-இல் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடத்தப்பட்ட சிறுகதைப் படைப்பு முகாமின் உழை ப்பை நினைவு கூர்ந்த அவர், தமிழ்ச் சிறுகதைகளின் வகைமைகளைத் தொகுத்து அவர் தயாரித்த கையேடு இன்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பதை எடுத்துரைத்தார். மக்க ளுக்கான தனது குரலை எழுத்திலும் களத்திலும் இடையறாது ஒலித்து வரும் தமிழ்ச்செல்வனுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார். ஆயிரம் பக்க ஆச்சரியமும் இலக்கிய வெற்றியும் சு.வெங்கடேசன் பேசுகையில், “எனது ‘காவல் கோட்டம்’ நூல் வெளி யீட்டு விழாவில், ஆயிரம் பக்கத்திற்கு ஒரு புத்தகம் எழுதினால் எப்படி என்று தமிழ்ச்செல்வன் என்னிடம் வினவி னார். இன்று அவரே ஆயிரம் பக்கம் கொண்ட ‘முதல் ஐம்பது ஆண்டுகள் - தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ நூலுக்காக விருது பெற்றுள்ளார். அவர் அன்று கேட்ட கேள்வி இப்போது அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது. இரண்டு புத்தகங்களுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது குறிப்பிட வேண்டிய அம்சம். படைப் பாளியாக மட்டுமின்றி களச் செயல்பா ட்டாளராகவும் விளங்கும் அவருக்கு வாழ்த்துகள்” என்றார். முற்போக்கு இலக்கியத்தின் அங்கீகாரம் தலைமை உரையாற்றிய சிகரம் ச.செந்தில்நாதன், சாகித்ய அகாட மித் தேர்வுக்குழு மேட்டுக்குடிக்கான எழுத்துகளுக்கு மட்டுமே முன்னு ரிமை கொடுத்து வந்த காலங்களில், எளிய மக்களின் பாடுகளை விவ ரிக்கும் இலக்கியங்கள் பக்கம் அவர் கள் பார்வையைத் திருப்ப முற்போக்கு எழுத்தாளர்கள் மேற்கொண்ட கருத்தியல் போராட்டங்களை நினைவுபடுத்தினார். தமுஎகச செயல் தலைவரும் திரைக்கலைஞருமான ரோகிணி பேசுகையில், “தமிழ்ச் செல்வன் எழுத்தை வாசிப்பது மட்டு மல்ல, அவரது வாழ்க்கையையும் வாசிக்கிறோம். அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம். ஆதிக்கத்திற்கு எதிரான குரலை அங்கீகரிக்க மறுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தில்தான் இந்த விருது இப் போது அறிவிக்கப்பட்டுள்ளது. உழைப் பாளி மக்களின் வரலாற்றைப் பேசும் அவரது நூல்களை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார். அகாடமியின் தன்னாட்சி காக்கப்பட வேண்டும் உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் தலைவர் ஆர்.பாலகிரு ஷ்ணன் ஐஏஎஸ் பேசுகையில், “விருது முடக்கப்பட்ட நேரத்தில், இந்த விருது அகாடமியிடம் இருந்து வந்தால் மட்டுமே பெற்றுக் கொள்வேன், அர சின் விருதாக அறிவிக்கப்பட்டால் ஏற்க மாட்டேன் என்று தமிழ்ச்செல்வன் அறி வித்திருந்தார். அவர் குறிப்பிட்ட வண்ணமே சாகித்ய அகாடமி விரு தாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது. தமுஎகச-வின் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு ‘வாழும் செம் மொழிகள்’ விருதை அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்றார். ஏற்புரையாற்றிய ச.தமிழ்ச்செல் வன், “விருதுக்காக ஆறாயிரம் கதை களை வாசித்து இந்த நூலை எழுதி னேன். வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இலக்கியம் ஏற்படுத்த வேண்டும். அகாடமி தரப்பில் இருந்து வழங்கப் பட்டால் மட்டுமே விருது பெற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருந் தேன். இந்த பாசிசப் போக்குள்ள அரசின் கைகளில் இருந்து விருது வாங்கும் பேச்சே இல்லை. தன்னாட்சி நிறுவனங்களைப் பாதுகாப்பது மற்றும் அதற்காக விழிப்போடு போரா டுவது அவசியம்” என்று வலியுறுத்தி னார். தமுஎகச பொருளாளர் சைதை ஜெ வரவேற்க, மூத்த படைப்பாளி இரா. தெ.முத்து முன்னிலையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பபாசி தலைவர் எஸ்.எஸ்.சண்முகம் வாழ்த்திப் பேசி னார். கருப்பு அன்பரசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார், பாரதி புத்தகாலய மேலாளர் க.நாகராஜன் நன்றி கூறினார்.</p>
