வான் தீவு பவளப்பாறை மீட்பு ரூ.62 கோடி மதிப்பிலான நன்மைகள் கிடைத்துள்ளதாக ஆய்வு தகவல்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>வான் தீவு பவளப்பாறை மீட்பு ரூ.62 கோடி மதிப்பிலான நன்மைகள் கிடைத்துள்ளதாக ஆய்வு தகவல்</strong></p>
<p>ராமேஸ்வரம், பிப். 23- மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 மக்கள் வசிக்காத பவளத் தீவுகளில் ஒன்று வான் தீவு. கடுமை யான அரிப்பினால் பாதிக்கப்பட்டு, 1969 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் 92% சுருங்கியிருந்தது. இந்நிலையில், தமிழக கடலோர மறுசீரமைப்பு இயக்கம், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறு வனம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகி யவை இணைந்து நடத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டின்படி, கடந்த பத்தாண்டுகளாக வான் தீவில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் ரூ. 61.67 கோடி மதிப்பிலான சமூக- சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இது திட்டத்திற்காகச் செலவிடப் பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். குறிப்பாக ஆய்வின் மூலம், இயற்கை சார்ந்த கடலோர மறுசீர மைப்பு என்பது சுற்றுச்சூழல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாக வும் பெரும் லாபத்தைத் தரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரப்பளவு குறைப்பு பவளப்பாறைகளை வெட்டி யெடுத்தல், கடல்மட்ட உயர்வு போன்ற வற்றால் 20 ஹெக்டேராக இருந்த வான் தீவு, 1.53 ஹெக்டேராகக் குறைந்தது. 2015ஆம் ஆண்டு முதல், தீவைச் சுற்றி 10,600 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை தொகுதிகள் நிறுவப்பட்டன. இந்த முயற்சியால் தீவின் பரப்பளவு தற்போது 2.3 ஹெக் டேராக அதிகரித்துள்ளது. “கடலோரப் பரப்பு இழப்பை மீண்டும் மீட்க முடியும்” என்பதற்கு இது ஒரு உறுதியான சான்றாகும் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.</p>
