தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஏபி பாசனத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு

28 Dec 2025, 5:05 pm
பிஏபி பாசனத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு
<p><strong>பிஏபி பாசனத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு</strong></p> <p>உடுமலை, டிச.28- பரம்பிக்குளம் &ndash; ஆழியாறு &nbsp;பாசனத் திட்ட கட்டுமானங்களை பராமரிப்பது மற்றும் மேம்படுத்து வது குறித்து ஒன்றிய அரசின் ஜல் &nbsp;சக்தித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆசியாவின் அதிசயமாக பார்க் கப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு &nbsp;பாசனத் திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்ட லங்கலாகப் பிரித்து, திருப்பூர் மற் றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேலான &nbsp;ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று &nbsp;வருகின்றன. இத்திட்டம் நடை முறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆன &nbsp;நிலையில், திட்டத்தில் உள்ள &nbsp;காண்டூர் கால்வாய், பரம்பிக்கு ளம் பிரதான கால்வாய், கிளைக் கால்வாய்கள், பகிர்மானக் கால் வாய்கள் மற்றும் மதகுகளிலுள்ள சட்டர்கள் ஆகியவை பெரிதும் பழு தடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு உரிய இடைவெளியில் நிதி ஒதுக் கீடு செய்து ஓரளவிற்கு சீரமைத்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கி வருகிறது. இருப்பினும் திட்ட கட்டுமானங்களை முழுவதும் சீர மைக்காததால், நீரிழப்பின் அளவு அதிகமாகி வருவதை சரிசெய்ய திட்ட கட்டுமானங்களை முழுவதும் &nbsp;புரைமைக்க ரூ.4500 கோடிக்கு விரி வான திட்ட மதிப்பீடு செய்து அர சுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலை யில், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறையிலிருந்து டாக்டர்.ரமேஷ், சென்னை சென்டர் வாட்டர் கமி ஷன் இயக்குநர் அசோகன், ஆதித்யா, அஷ்ரப் ஆகியோர் அடங்கிய குழுவினர், திருமூர்த்தி அணை மற்றும் கால்வாய்கள், பாச னப் பகுதிகள், கிணறுகள் ஆகிய வற்றை வெள்ளியன்று பார்வை யிட்டனர். இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு குழுவினரிடம், ஆழியார் வடிநிலக்கோட்ட செயற் பொறியாளர் நரேந்திரன், உதவி &nbsp;செயற்பொறியாளர்கள் பொள் ளாச்சி சக்திகுமார், பல்லடம் ராஜன், திருமூர்த்தி அணை ஆதிசி வன், உதவிப் பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் விளக்கிக் கூறி னர். ஒன்றிய அரசின் வல்லுநர் குழு விடம் தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பரமசிவம், பிஏபி திட்டத்தில் &nbsp;சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மழைப் பொழிவின் அள வைப் பொறுத்து கிடைக்கும் &nbsp;குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு நடைபெற்று வரும் விவ சாய முறைகளையும், விவசாயிக ளின் நிலைமைகளையும் எடுத் துரைத்தார். மேலும், போர்க்கால அடிப்படையில் அணையிலிருந்து விவசாயிகளுக்கு பாசனத்திற்கு செல்லும் பிரதான கால்வாய் முதல் &nbsp;கடை மடை பாசனத்திற்கு செல்லும் &nbsp;அரணி வாய்க்கால் வரை முழுமை யாக பராமரிப்பு செய்தால் மட்டுமே, &nbsp;அணையின் தண்ணீர் விவசாயிக ளுக்கு பயன்படும் எனவும் வலியு றுத்தினார். பிஏபி திட்டத்தை மேம் பாடு செய்வது குறித்து அடுத்தடுத்த கட்டங்களில் விவசாயிகள் மற் றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ளோடு கலந்தாலோசித்து, திட்டத் தினை மேம்படுத்தி, விவசாயத் திற்கு போதுமான தண்ணீர் கிடைப் பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பதே விவ சாயிகளின் எதிர்பார்ப்பாக உள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.