மாமல்லபுரம் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஆய்வு
10 Feb 2026, 4:50 pm
<p><strong>மாமல்லபுரம் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஆய்வு </strong></p>
<p>மாமல்லபுரம், பிப். 10- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தற்போது போதிய இடவசதி இல்லாததால், அதற்கான கட்டமைப்புடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் கட்ட கிழக்கு கடற்கரை சாலை அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ள இடத்தில், புதிய அலுவலகம் கட்ட சாத்தியக்கூறு உள்ளதா என புதனன்று (பிப்.10) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நகராட்சி ஆணையர் வித்யாஸ்ரீ, திமுகவின் மாமல்லபுரம் நகர செயலர் விஸ்வநாதன், நகராட்சி கவுன்சிலர் மோகன் குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
