தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள், வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
yesterday

தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள், வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடசென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் மோகனகிருஷ்ணன், கு.குணா, வி.பகத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடசென்னை ஆர்.கே. நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் அனீஷ், மாதவன், பாக்கியலட்சுமி, செழியன், கீர்த்தனா, நவீன், ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தின்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட வாலிபர் சங்க, மாணவர் சங்கத்தினர் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லி மாணவர் போராட்டத்தைக் ஆதரித்தும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை எதிரில், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சத்யதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தயாநிதி, இரா. சதீஷ் மற்றும் ச. ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் சி. எம். பிரகாஷ், ஒன்றிய செயலாளர் அபிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.