முந்தய பக்கம்

மாணவர்கள் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

21 May 2026, 1:28 am
மாணவர்கள் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>மாணவர்கள் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்கக் கோரியும் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பா.தினேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கா.சக்கரவர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அ.ரகு, மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.இறுதியாக அ.மா.பெ. மாவட்ட துணைச் செயலாளர் செ.சஞ்சய் நன்றி கூறினார்.</p><p>நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அமைப்பைக் கலைக்க வலியுறுத்தியும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) ஆகிய இடதுசாரி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram