1330 திருக்குறள்களை தலைகீழாக எழுதும் சாதனை நிகழ்வு மாணவிகளுக்கு ஆட்சியர் நேரில் பாராட்டு
11 Jun 2026, 9:38 pm

1330 திருக்குறள்களை தலைகீழாக எழுதும் சாதனை நிகழ்வு மாணவிகளுக்கு ஆட்சியர் நேரில் பாராட்டு

சாத்தூர், ஜூன் 11- சாத்தூர் அருகே பள்ளி மாணவிகள் 1330 திருக்குறள் களை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா துவக்கி வைத்து பாராட்டினார். சாத்தூர் அருகேயுள்ளது ந.சுப்பையாபுரம். இங் குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மு. யாசினி, மா.பவித்ரா, கு.சாரு மதி மற்றும் சு.மதுஸ்ரீ மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மு.அனுஷா, மா.மாதவி மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் கி.ஸ்ரீவர்ஷினி ஆகிய 7 பேரும் 1330 திருக்குறள்களை மனனம் செய்து அதை 15 மணி நேரத்தில் தலைகீழாக எழு தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மாணவிகளை ஊக்கப்படுத்தினார். இச்சாதனை நிகழ்ச்சி யை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், தமிழ் வளர்ச்சித் துறை, கரிசல் இலக்கியக் கழகம், மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி, ரோட்டரி சங்கம், கோவில்பட்டி போன்ற இயக்கங்கள் கண் காணிக்கின்றனர். மாணவிகளின் இம் முயற்சியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோ கன் வாழ்த்துச் செய்தி மூலம் பாராட்டியுள்ளார்.