ஆளுநரின் ‘நேரமின்மை’ புகாரால் பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அதிருப்தி!
14 Feb 2026, 4:33 pm
<p><strong>ஆளுநரின் ‘நேரமின்மை’ புகாரால் பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அதிருப்தி!</strong></p>
<p>கோவை, பிப். 14- கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி இதில் கலந்துகொண்டு மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கினார். வழக்கமான உற்சாகத்துடன் தொடங்க வேண்டிய இவ்விழா, கடைசி நேரத்தில் ஏற்பட்ட ஒரு அறிவிப்பால் பெரும் சர்ச்சையி லும் போராட்ட அறிவிப்பிலும் முடிந் தது. இந்த ஆண்டு பாரதியார் பல் கலைக்கழகத்தின் கீழ் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த 92,287 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங் கள் வழங்கப்பட இருந்தன. இதில் 1,530 பேருக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழா வில் ஆளுநர் கையால் நேரடியாகப் பட்டம் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டு, அதற்கான அழைப் புக் கடிதங்களும் அனுப்பப்பட்டி ருந்தன. ஆனால், விழா தொடங்குவ தற்கு சற்று முன்பாக, ஆளுந ருக்கு நேரமின்மை காரணமாகப் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை 1,530-லிருந்து 1,308-ஆகக் குறைக் கப்பட்டது. சுமார் 383 மாணவர்க ளுக்கு ஆளுநர் கையால் பட்டம் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி அன் றைய தினம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு செல்ல திட்டமிட்டி ருந்ததாகவும், அந்த பயணத்திற் காகவே பட்டமளிப்பு விழாவை விரைந்து முடிக்க பல்கலைக் கழக நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்ததாகவும் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவர்கள் ஆவேசம டைந்தனர். “ஆண்டுக் கணக்கில் காத்தி ருந்து ஆளுநர் கையில் பட்டம் பெற வந்த மாணவர்களை, நேரமின்மை எனக் கூறி தவிர்ப்பது நியாயமற் றது” என மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, மாணவர்கள் ஊடகங்கள் வாயிலாகப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். இத னால் பதற்றமடைந்த பல்கலைக் கழக நிர்வாகம், மாணவர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டது. இறுதியில், சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா திட்ட மிட்டபடி நடைபெற்றது. இதில், பார தியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 1,270 மாணவர்கள் மற்றும் முதுகலை யில் தங்கப்பதக்கம் பெற்ற மாண வர்கள் 38 பேர் என மொத்தம் 1,308 பேருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பட்டம் வழங்கினார். முன்னதாக, ஆளுநர் நேர மின்மை என்கிற தகவல் பரவிய தால், பட்டம் வழங்க திட்டமிடப் பட்டவர்களில் 99 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதனையடுத்து போராட் டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த மாணவர்கள் 28 பேருக்கு பட்ட மளிப்பு விழாவின் போதே பட்ட மளிக்கப்பட்டது. தொடர்ந்து 1-10-2025ம் ஆண்டு முதல் 30-1-2026 வரை யிலான கால கட்டத்தில் பிஎச்டி முடித்து விடுபட்ட மாணவர்க ளுக்கு அடுத்த வாரத்தில் பட்டம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழகம் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
