யுஜிசி விதிகளை ஒன்றிய அரசு அமல்படுத்தக் கோரி மாணவர்கள் பேரணி
13 Feb 2026, 5:58 pm
<p><strong>யுஜிசி விதிகளை ஒன்றிய அரசு அமல்படுத்தக் கோரி மாணவர்கள் பேரணி</strong></p>
<p>ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதி, மதப் பாகுபாடுகளை தடுப்பதற்கான விதிமுறைகளை யுஜிசி கொண்டு வந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, யுஜிசி விதிகளை ஒன்றிய அரசு அமல்படுத்தக் கோரி ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு’ சார்பில் வெள்ளியன்று சென்னையில் பேரணி நடைபெற்றது. திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, திக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார் மற்றும் இப்ராஹிம் (ஏஐஎஸ்எப்), சின்னத்தம்பி (என்எஸ்யுஐ), இரா.ரேவதி (திராவிடர் மாணவர் பேரவை), மணியரசன் (ஆர்எஸ்ஒய்எப்) உள்ளிட்ட 15 அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.</p>
