ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு நாங்கள் பாதிக்கப்பட வேண்டுமா? நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் குமுறல்
13 May 2026, 1:51 am

ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு நாங்கள் பாதிக்கப்பட வேண்டுமா? நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் குமுறல்

கோவை, மே 12 - எழுதி முடித்த நீட் தேர்வு செல் லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மாணவர்களின் நம்பிக் கையை ஒன்றிய மோடி அரசு மீண் டும் ஒருமுறை மாணவர்களை துவம்சம் செய்துள்ளது.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங் களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த தாக கூறப்படும் புகார்களை தொடர்ந்து, கடந்த வாரம் நடை பெற்ற நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதாக வெளியாகி யுள்ள அறிவிப்பு, தேர்வு எழுதி விட்டு முடிவுகளுக்காக காத்திருக் கும் மாணவர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறு கையில், பகலிரவாக படித்துத் தேர்வு எழுதினோம்.

ஆனால், வட மாநிலங்களில் தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் ஒரு சிலருக்கு கைமாறிப் போயிருக்கிறது என் றால், இந்த தேர்வு முறையின் நேர்மை எங்கே போனது? என்று மாணவர்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு நாட்டின் மிக உயரிய மருத்துவத் தேர்வையே முறையாக நடத்தத் துப்பில்லாத ஒரு நிர்வாகம், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்? இந்த முறைகேடுகள் எதேச்சை யாக நடப்பவை அல்ல; மாறாக, வசதி படைத்தவர்களுக்கும், வட மாநில லாபிகளுக்கும் சாதகமாக இந்த தேர்வு முறை திட்டமிட்டு சிதைக்கப்படுவதையே இது காட்டு கிறது.

எங்கள் கண் துஞ்சா உழைப் புக்கு இங்கே மதிப்பில்லை.

பண மும் செல்வாக்கும் இருந்தால் எதை யும் சாதிக்கலாம் என்ற நிலையை இந்த தேர்வு முறை உருவாக்கி வைத்திருக்கிறது.

இப்போது மீண் டும் ஒருமுறை தேர்வை எழுதச் சொல்வது எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு சாத்தியமா?” என மாணவர்கள் குமுறுகின்றனர்.

ஒருபுறம் ’ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்று முழங்கும் ஒன்றிய அரசு, மறுபுறம் அந்தத் தேர்வை பாதுகாப்பாகக்கூட நடத்த முடியா மல் நிர்வாகத் தோல்வியை தழு வியுள்ளது.

ஒவ்வொரு முறை முறைகேடுகள் அம்பலமாகும் போதும், விசாரணைக் குழுக்களை அமைப்பதோடு அரசு தனது கட மையை முடித்துக் கொள்கிறது.

ஆனால், விடிய விடியப் படித்து தேர்வுக்குத் தயாரான மாணவர்க ளின் மன உழைச்சலுக்கும், அவர் கள் இழந்த காலத்திற்கும் யார் பதில் சொல்வார்கள்? தேசியத் தேர்வு முகமையின் (NTA) இந்த தொடர் தோல்விகள், நீட் தேர்வின் அவசியத்தையே கேள்விக்குறி யாக்கியுள்ளன.

மாணவர்களின் உயிரோடும், உணர்வுகளோடும் விளையாடும் இந்த தேர்வு முறையை ஒழிப்பதே நிரந்தரத் தீர் வாக அமையும் என்று கல்வியாளர் கள் எச்சரிக்கின்றனர்.

ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கிற்கு எதிராக மாணவர் அமைப்புகளும், பெற்றோர்களும் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகியுள்ளது.

இனியாவது மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைப்பதை நிறுத்திவிட்டு, ஒரு வெளிப்படையான, நேர்மையான கல்விச் சூழலை உருவாக்க ஒன்றிய அரசு முன்வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.