முந்தய பக்கம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

29 Jan 2026, 5:39 pm
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து  மாணவர்கள் சாலை மறியல்
<p><strong>தேர்வு கட்டண உயர்வை கண்டித்து &nbsp;மாணவர்கள் சாலை மறியல்</strong></p> <p>சிதம்பரம், ஜன.29- அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் &nbsp;போராட்டம் நடை பெற்றது. சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் என உயர்த்தியுள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் எந்த &nbsp;நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அனைத்து கட்டணத் தையும் திரும்ப பெற வலியுறுத்தி சி.முட்லூர் அரசு &nbsp;கலை கல்லூரியில் மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வகுப்பை புறக்கணித்து &nbsp;சிதம்பரம் &ndash; கடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை செயலாளர் அன்பு &nbsp;தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இணை செயலாளர் சிவநந்தினி &nbsp;கட்டண உயர்வால் மாணவர்கள் பாதிக்கப் படுவதை சுட்டிக்காட்டி பேசினார். இதில் மாணவர் சங்கநிர்வாகிகள் மகேந்திரன், கனிமொழி, ஆகாஷ், பிரேம், ஹரி, காவ்யா, அபி.விக்னேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களிடம் சிதம்ப ரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதிப் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram