வியாசார்பாடியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
2 Mar 2026, 3:30 pm
<p><strong>வியாசார்பாடியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இந்தியாவில் உள்ள உயர் கல்வி வளாகங்களில் சாதி, மத ரீதியான பாகுபாட்டை தவிர்க்க யுஜிசி கொண்டுவந்துள்ள ரோஹித் வெமுலா சட்டத்தை அமல்படுத்த கோரியும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், ஜனநாயக முறையில் போராடிய மாணவர் சங்கத் தோழர்களை அராஜகமாக கைது செய்ததை கண்டித்தும் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்டகுழு உறுப்பினர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மோகன கிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் பகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
