தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

400 மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய வி.பி.எம் கல்லூரி நிர்வாகம் விருதுநகரில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்!

4 Mar 2026, 5:01 pm
400 மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய வி.பி.எம் கல்லூரி நிர்வாகம்  விருதுநகரில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்!
<p><strong>400 மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய வி.பி.எம் கல்லூரி நிர்வாகம் &nbsp;விருதுநகரில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்!</strong></p> <p>விருதுநகர், மார்ச் &nbsp;4 - முறையான அனுமதி யின்றி மாணவர் சேர்க்கை &nbsp;நடத்தி, சுமார் 400 மாணவர் களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய வி.பி.எம் கல்லூரி நிர்வா கத்தைக் கண்டித்தும், மாண வர்களுக்கு உரியச் சான்றி தழ்களை வழங்கக் கோரி யும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தி னர் புதனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;முறைகேடான மாணவர் சேர்க்கை: மாணவர்களின் குமுறல் &nbsp;விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள வி.பி.எம் &nbsp;மகளிர் கல்லூரி, கடந்த 2023-ஆம் ஆண்டு &lsquo;மாண வர்களும் சேரலாம்&rsquo; எனப் போலியான விளம்பரங் களை வெளியிட்டுள்ளது. &nbsp;இதனை நம்பி 175 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயின்று வந்தனர். &nbsp;தற்போது மூன்றாம் ஆண்டு இறுதிப் பருவத் &nbsp;தேர்வு நெருங்கும் நிலை யில், மாணவர்களுக்கு முந்தைய பருவங்களுக் கான மதிப்பெண் சான்றி தழ்களைக் கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை. &nbsp;மாணவர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய போதெல்லாம், 10 அல்லது 15 நாட்களில் சான்றிதழ் வந்துவிடும் என நிர்வாகம் பொய்யான வாக்குறுதி களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளது. மகளிர் கல்லூரி என அரசுப் பதி வேடுகளில் உள்ள ஒரு கல்வி &nbsp;நிறுவனத்தில், மாண வர்களைச் சேர்க்க முறை யான அனுமதி பெறாமல் நிர்வாகம் முறைகேட்டில் ஈடு பட்டது தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. மகளிர் கல்லூரி என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப் பட்டால், மாணவர்கள் வேலைவாய்ப்பிற்குச் செல்ல முடியாத நிலை &nbsp;ஏற்படும் எனப் பாதிக்கப்பட்ட வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். &nbsp;உறுதிமொழியை மீறிய பல்கலைக்கழகம் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழக முதல்வர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பங்கேற்றனர். அப்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் இக்கல்லூரிக்கு &lsquo;இருபாலர் கல்லூரி&rsquo; என்ற அரசாணை யைப் பெறத் தவறினால், மாணவர்களை மாற்றுக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கப் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. &nbsp;ஆனால், இந்த உறுதி மொழி இதுவரை நிறை வேற்றப்படவில்லை. &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் &nbsp;அதிகாரிகளின் மெத்த னப் போக்கினால் கொதிப் படைந்த மாணவர்கள், புத னன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் அமர்ந்து காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆனந்தகண்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தைத் தொடங்கி வைத்து மாநிலத் துணைத் தலைவர் சைலஸ் அருள் ராஜ் கண்டன உரையாற்றி னார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தீபக்குமார், மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். &nbsp;போராட்டக்களத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். மாண வர்களின் புகார்களைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சி யர் சுகபுத்ரா, இவ்விவ காரத்தில் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். &nbsp;இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கல்வி உரிமையை நிலைநாட்ட முழக்கங்களை எழுப்பினர். (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.