தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க எதிர்ப்பு: உடுமலையில் மாணவர்கள் போராட்டம்

13 Mar 2026, 4:52 pm
தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க எதிர்ப்பு: உடுமலையில் மாணவர்கள் போராட்டம்
<p><strong>தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க எதிர்ப்பு: உடுமலையில் மாணவர்கள் போராட்டம்</strong></p> <p>உடுமலை, மார்ச் 13- தமிழகத்தில் தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் அரசு கால் நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட் டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பண்ணை கிணறு ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் மாணவர்கள் படித்து &nbsp;வருகின்றனர். இந்நிலையில் வெள்ளி யன்று தமிழகத்தில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கவனயீர்ப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இதுகுறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்து தமி ழக முதல்வரிடம் கால்நடை மருத்துவ &nbsp;பட்டதாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட் டது. மேலும் தனியார் கல்லூரி தொடங் கப்பட்டால், கால்நடை மருத்துவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்ப தற்கான அபாயம் உள்ளது. மேலும், விளிம்பு நிலை மாணவர்கள் கால்நடை &nbsp;மருத்துவர் ஆக முடியாத நிலை ஏற்ப டும் எனவும், புதிய தனியார் கால்நடை &nbsp;மருத்துவக் கல்லூரிகளை தொடங்கு வது வேலைவாய்ப்பு பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என்றனர். மேலும் &nbsp;அவர்கள் கூறுகையில், 800 கால்நடை மையங்களை முழுமையான கால்நடை &nbsp;மருந்தக நிலையங்களாக மேம்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை யில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். வனத்துறையில் கால்நடை மருத்துவ பணியிடங்கள் நிரப்ப வேண் டும். 24 மணி நேரம் சேவையை உறுதிப்ப டுத்த வேண்டும். 1962 கால்நடை ஆம்பு லன்ஸ் சேவையை 24 மணி நேரமும், மூன்று பணி முறை அடிப்படையில் உட னடியாக செயல்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசு &nbsp;செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.