முந்தய பக்கம்

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

30 Jan 2026, 5:56 pm
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக  நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக &nbsp;நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருநெல்வேலி,ஜன.30- தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை களை உடனடியாக வழங்கவும், காலிப்பணி யிடங்களை நிரப்பவும் கோரி தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். &nbsp;நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆசிரி யர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் &nbsp;இந்திய மாணவர் சங்க செயலாளர் சைலஸ் அருள்ராஜ்,மூட்டா &nbsp;சங்க நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram