6 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை மாணவர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>6 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை மாணவர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்</strong></p>
<p>திருநெல்வேலி, பிப் .19- நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் 6 பல் கலைக்கழக கல்லூரிகளை உடனடியாக அரசு கல்லூரி களாக அறிவிக்கக் கோரி, பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு எஸ்.எப்.ஐ (SFI) சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. 25 ஆண்டுகளாகியும் இக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படாத தால் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இழுபறியில் சிக்கி யுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தின் பிற பகுதி களில் 35 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படு வதாக அவர்கள் முழக்கமிட்ட னர். சட்டமன்ற கூட்டத்தொடரி லேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மாணவர்கள் எச்சரித்தனர். இந்த பெருந்திரள் முறை யீட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி, தென்காசி மாவட்டச் செயலா ளர்கள் சைலஸ் ராம்குமார் மதன், மாவட்டத் தலைவர்கள் சுரேஷ் மாடசாமி மற்றும் 500க்கும் அதிகமான மாண வர்கள் கலந்து கொண்டனர்.</p>
