முந்தய பக்கம்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மடிக்கணினி கோரி மாணவர்கள் தர்ணா

20 Feb 2026, 2:39 pm
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மடிக்கணினி கோரி மாணவர்கள் தர்ணா
<p><strong>தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மடிக்கணினி கோரி மாணவர்கள் தர்ணா</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.20- &nbsp;தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கக் கோரி ஒருங்கிணைந்த மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் வியாழக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இது குறித்து மாணவர்கள் தெரிக்கையில், &ldquo;அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு, அண்மையில் விலையில்லா மடிக்கணினி வழங்கியது. இத்திட்டம் தொழில் சார்ந்த ஆய்வு பணியில் ஈடுபடும் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது. &nbsp;இதனிடையே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இத்திட்டத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் நான்காமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை முதலாமாண்டு, இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. &nbsp;அடுத்து முனைவர் பட்டம் படிப்பதற்கும், போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கும் எங்களுக்கு மடிக்கணினியின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, எங்களுக்கும் மடிக்கணினி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்&rsquo;&rsquo; என்றனர். &nbsp;மாணவர்களிடம் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மடிக்கணினி வழங்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக பதிவாளர் (பொ) உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram