தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோசமான உணவு, குடிநீர்  ம.பி. தனியார்  கல்வி நிறுவனத்தில்  மாணவர்கள் போராட்டம்

26 Nov 2025, 3:40 pm
மோசமான உணவு, குடிநீர்  ம.பி. தனியார்  கல்வி நிறுவனத்தில்  மாணவர்கள் போராட்டம்
<p><strong>மோசமான உணவு, குடிநீர் &nbsp;ம.பி. தனியார் &nbsp;கல்வி நிறுவனத்தில் &nbsp;மாணவர்கள் போராட்டம்</strong></p> <p>மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், உணவு மற்றும் குடிநீரின் தரம் &nbsp;&lsquo;மிக மோசமாக&rsquo; இருப்பதைக் கண்டித்து &nbsp;மாணவர்கள் போராட்டம் நடத்தினர். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 3,000 முதல் 4,000 மாணவர்களால் &nbsp;தரமான &nbsp;உணவு, தூய்மையான குடிநீர் வழங்க &nbsp;வேண்டும் என வலியுறுத்தி &nbsp;துவங்கிய &nbsp;போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறை யாக மாறியுள்ளது. &nbsp;இதில் ஓரு பேருந்து, &nbsp;இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், ஒரு &nbsp;ஆம்புலன்ஸ், விடுதி ஜன்னல் கண்ணாடி கள், குடிநீர் &nbsp;(RO) சுத்திகரிப்பு ஆலை மற்றும் வளாகத்தின் பிற பகுதிகள் சேத மடைந்தன. &nbsp;போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு &nbsp;சென்ற காவல்துறையினர் மாணவர்களு டன் &nbsp;பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணத் தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று &nbsp;உறுதியளித்ததாகவும் இதனைத் &nbsp;தொட ர்ந்து, நிலைமை கட்டுக்குள் வந்துள்ள தாகவும் காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. &nbsp;இதையடுத்து தனியார் கல்வி &nbsp;நிறு வனம் நவம்பர் 30 வரை விடுமுறை அறி வித்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் சுக்லா தெரிவித்துள்ளார். இது கல்வி நிறுவனத்தின் தோல்வி மட்டுமல்ல பாஜக அரசாங்கம் மற்றும் &nbsp;அதன் அரசு நிர்வாக அமைப்பின் தோல்வி. அதிகக் கட்டணம் வசூலித்த நிர்வாகம் சுத்தமான நீர், தரமான உணவு என போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை. மேலும் மோசமான குடி நீர் தரத்தால் மாணவர்கள் பலர் மஞ்சள் &nbsp;காமாலையால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.