அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
13 Feb 2026, 5:58 pm
<p><strong>அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்</strong></p>
<p>சிதம்பரம், பிப்.13- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்று கையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம், சான்றி தழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் எனப் பல்வேறு கட்டணங்களைப் பல் கலைக் கழக நிர்வாகம் 60 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் உயர்த்திய அனைத்துக் கட்டணங்களையும் திரும்பப் பெற வலியு றுத்திக் கடலூர், விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, மயி லாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் ஒன்று திரண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தனர். இவர்கள் அனை வரும் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சௌமியா தலைமையில், சங்கத்தின் மாநிலச் செய லாளர் சம்சீர் அகமது, கடலூர் மாவட்டத் தலை வர் பூபதி, மாவட்டச் செய லாளர்களான மயிலாடு துறை அபினேஷ், விழுப்பு ரம் ஜீவானந்தம், கள்ளக் குறிச்சி பிரகாஷ்காரத், மாநிலக் குழு உறுப்பினர்கள் சபரி, திவ்யா உள்ளிட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுடன் பல்கலைக் கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலையில் ஒன்று கூடினர். அங்கி ருந்து பேரணியாகப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்திற்கு வந்து தரை யில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட முக்கிய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்களைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி மதியம் 1 மணி அள வில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலை யில், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டிடத்தில் அனைத்து மாணவ மாணவி களும் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியையும் பதாகைகளையும் ஏந்தி, கோரிக்கைகளை வலி யுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் கோரிக்கைக் கோஷங்க ளால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4 மணி வரை மாணவர்களை அழைத்துச் சரியான பதில் கூறாததால் பல்கலைக்கழகப் பதிவாளர் அறையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், வரும் 25-ஆம் தேதி வரை கால அவ காசம் அளிக்குமாறும், கமிட்டியில் பேசிவிட்டுக் கட்டணங்களைக் குறைப்பது குறித்து முடி வெடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியதால் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.</p>
