மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்</strong></p>
<p>மேட்டுப்பாளையம், ஜன.10- ‘மழை வளம் பெற மரம் வளர்ப்பு’ குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தென்னிந்திய ரயில்வே மற்றும் தனியார் மகளிர் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா காரமடை ரயில் நிலைய வளா கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய ரயில்வே, எஸ்.எஸ்.வி.எம் தனியார் பள்ளி மற்றும் கோவை கிளை இந்திய தொழில் வர்த்தக சபை மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து கோவை மாவட்டம், காரமடை ரயில் நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளியன்று நடைபெற் றது. பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் தலைமையில் மகளிர் அமைப்பு தலைவி அபர்ணா சுங் முன்னிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பண்ணாலால் மரக்கன்று நடும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளிடையே பேசினார். இதில், மகளிர் பிரிவு நிர்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகள் வேப்பம், மகாகனி, கொய்யா, புளியமரம் உள்ளிட்ட 8000 மரக்கன்றுகளை நட்டனர். ரயில் நிலைய சுற்றுச்சுவர் அருகே இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த இடத்தில் தற்போது 8000 மரக்கன்றுகள் நட்டு வளர்பதன் மூலம் அப்பகுதி பசுமையாக மாறும் என உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.</p>
