தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அக்டோபர் 2025 வாரியத் தேர்வில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

10 Jan 2026, 2:48 pm
அக்டோபர் 2025 வாரியத் தேர்வில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர்கள் மாநில அளவில் சாதனை
<p><strong>அக்டோபர் 2025 வாரியத் தேர்வில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி &nbsp;மாணவர்கள் மாநில அளவில் சாதனை</strong></p> <p>திருவாரூர், ஜன.10- &nbsp;திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அக்டோபர் 2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களும் அதிக விழுக்காடு தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனர். &nbsp;பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் பல மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கட்டிடவியல் துறை மூன்றாமாண்டு மாணவி சஞ்சனா, கணிப்பொறியியல் துறை இரண்டாமாண்டு மாணவி கீர்த்தனா இருவரும் 100 &nbsp;விழுக்காடு பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர். மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் மனோஜ் 99 சதவீத விழுக்காடு பெற்று இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், வழிகாட்டிய ஆசிரியர்களையும் சேர்மன் ரவி, வைஸ்சேர்மன் ராகவ் தினேஷ் மற்றும் தாளாளர் தேவகி, இயக்குநர்கள் மதுமதி, காவ்யபிரியா ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். நிகழ்வில் மேலாளர் துரை.சரவணன், முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.