திருவாரூர் திருவிக கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
16 Dec 2025, 3:51 pm
<p><strong>திருவாரூர் திருவிக கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்</strong></p>
<p>திருவாரூர், டிச.16- திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் இந்த மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை கேட்டு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தலைவர் செல்வபிரகாஷ் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில், சில வகுப்புகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை. கழிவறைகள் சுத்தமின்றி சுகாதார கேடாக உள்ளது. மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்திட கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில், கல்லூரி முதல்வர் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் 10 நாட்களில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து தற்காலிகமாக மாணவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.</p>
