தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 14- தமிழ்நாட்டில் தனியார் கால்நடை மருத் துவக்கல்லூரி துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் தற்போது 7 அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டுதோ றும் சுமார் 680 மாணவர்கள் கால்நடை மருத் துவ பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். இதில் 400க்கும் மேற்பட்டோர் அரசு கால்நடை மருத்துவர்களாக பணியில் சேருகின்றனர். கால்நடைகள் கணக்கெடுப்பின் படி, தமிழ் நாட்டில் சுமார் 2.45 கோடி கால்நடைகள் உள்ளன. தேசிய வேளாண்மை ஆணையத் தின் தரநிலைகளின் படி, மாநிலத்திற்கு 4,900 முதல் 6,125 கால்நடை மருத்துவர்கள் போதுமானதாக கருதப்படுகிறது. ஆனால், தற்போது தமிழ்நாடு மாநில கால்நடை மருத் துவ கவுன்சிலில் 8,528 கால்நடை மருத்து வர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் உள் ளிட்ட பகுதிகளில் மூன்று தனியார் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்படவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் கால்நடை மருத்துவ பட்ட தாரிகளுக்கு வேலைவாய்ப்பு பிரச்சனை அதி கரிக்கும் அபாயம் உள்ளது. தனியார் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளியன்று கல் லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் கூறுகையில், தனி யார் கால்நடை மருத்துவக்கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 800 கால்நடை கிளை நிலையங்களை முழுமையான மருத் துவ நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும், என்றனர்.</p>
