நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் வாய்ப்பை பிற மாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்கின்றனர்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் வாய்ப்பை பிற மாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்கின்றனர்</strong></p>
<p>அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி சிவகங்கை, நவ.11- நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர் களின் வாய்ப்பை பிற மாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்க காரணமானவர்களுக்கு வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கையில் செவ்வாயன்று திமுக மாவட்ட அலுவலக செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ்ரூசோ, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார், இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், பொன்னுச்சாமி, மானாமதுரை ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, துரைராஜா, மணி, சிவகங்கை ஒன்றி யச் செயலாளர் ஜெயராமன், முத்து ராமலிங்கம், காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு நவ.14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவர் வருகை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வளர்ச்சிக்கும், திமுகவினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். முதல் நாள்(நவ.14) நிகழ்ச்சி யாக காரைக்குடி மாதிரி பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்று 11-ஆம் வகுப்பு மாணவ - மாண விகளுக்கு மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கின்றார். இதனைத் தொடர்ந்து மறுநாள் (நவ.15) காலையில் சிங்கம்புணரி பேரூராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பிறகு சிங்கம்புணரியில் அண்ணா மண்ட பத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முன்னாள் அமைச்சர் செ.மாதவன் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கின்றார். தொடர்ந்து கிருங்காக்கோட்டையில் சிறுகதை மன்னர் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.தென்னரசு வின் மார்பு அளவு சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் சிங்கம்புணரி யில் நடைபெறும் அரசு சார்பில் பயனாளி களுக்கு மக்கள் நலத்திட்டங்களை வழங்குகிறார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கான அனைத்து நிதிகளும் வழங்கப்பட்டுள்ள தாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை இது வரை ஏன் வழங்கவில்லை. இதன் மூலம் பாரபட்சம் பார்ப்பது யார்? பொய் சொல்வது யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் வாய்ப்பை பிற மாநிலத்தவர்கள் தட்டிப் பறிக்கும் நிலைக்கு காரணமானவர் களுக்கு வருகின்ற 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் தெரிவித்தார்.</p>
