விடுதி உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>விடுதி உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 31- நாமக்கல் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல மாணவி யர் விடுதியில் தங்கி இருந்த மாண விகள் திங்களன்று மதியம் உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்த நிலை யில், அவர்கள் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றன. பாதிக்கப்பட்ட மாணவிகளை இந்திய மாணவர் சங்க நிர்வாகி கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்த னர். அப்போது மாணவிகள் தரப் பில் அடுக்கடுக்கான புகார்கள் முன் வைக்கப்பட்டன. விடுதியில் தொடர்ந்து சுகாதாரமற்ற மற்றும் பழைய உணவுகள் வழங்கப்படுவ தாகவும், மாணவிகளையே சமை யல் வேலைகளுக்கு பயன்படுத்து வதாகவும் அவர்கள் வேதனை தெரி வித்தனர். மேலும், சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதி இல்லாமை, பயன்பாட்டில் இல்லாத நாப்கின் எரிப்பான் இயந்திரம் போன்ற அடிப்படை வசதி குறைபாடுகளை யும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியி னர் நலத்துறை அலுவலகத்தில் தனி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ”மாணவிக ளின் உடல்நலத்திற்கு கேடு விளை வித்த விடுதிக் காப்பாளர் மற்றும் சமையலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள விடுதி களில் அதிகாரிகள் மாதத்திற்கு இருமுறை ஆய்வு செய்ய வேண் டும்,” என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், தலைவர் நிசார், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் சர வணன், இணைச் செயலாளர் பச்ச முத்து, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கன்னிகா, சூர்யா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
