தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

13 Feb 2026, 5:58 pm
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்</strong></p> <p>உடுமலை, பிப்.13- உடுமலை அரசு கலைக்கல்லூரி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் உடு மலை அரசு கலைக் கல்லூரி மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். உடுமலை அரசு கலைக் கல்லூரி யில் அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுயாளர்களுக்கும் 12 &nbsp;மாத சம்பளம் வழங்க வேண்டும். &nbsp;ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர் களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். பெண் கௌரவ &nbsp;விரிவுரையாளர்களுக்கு ஊதியத்து டன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த மூன்று நாட் களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு &nbsp;வருகின்றனர். &nbsp;இந்நிலையில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்க ளுக்கு ஆதரவாக அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில், வகுப்பு களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் உடுமலை &nbsp;கிளை தலைவர் அறவாழி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் &nbsp;செயலாளர் மணிகண்டன் சிறப்புரை யாற்றினார். பல்லடம் அரசுக் கல்லூரி இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்லடம் அரசு கல்லூரியில் போராடி வரும் கௌரவ விரிவுரையாளர்களை வெள்ளியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட இணை செயலாளர் பிரவீன் குமார் ஆதரித்துப் பேசினார். உடன் வாலிபர் சங்க பல்லடம் ஒன்றிய தலைவர் சி. முருகேஷ், சிஐடியு நிர்வாகிகள் பரமசி வம், முருகசாமி உள்ளிட்ட பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.